டாடா, ஹூண்டாய்னு எதிர்பார்த்தோம்... ஆனா 2025இல் கார் மார்க்கெட்டை தலைக்கீழா புரட்டி போட்ட கம்பெனி இதுவா?

இந்திய பயணிகள் வாகனச் சந்தையில், மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம், 2025ஆம் ஆண்டின் வஹான் (Vahan) தரவுகளின் அடிப்படையில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஜனவரி- நவம்பர் வரையிலான இந்தத் தரவுகளின்படி, மாருதி சுஸுகி (Maruti Suzuki) 17.50 லட்சம் கார்கள் விற்பனை உடன் வழக்கம்போல் முதலிடத்தில் உள்ளது. இன்னும் இந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வராததால், அதன் விற்பனை எண்ணிக்கைகள் இதில் அடங்கவில்லை.

இந்த விற்பனை லிஸ்ட்டில் மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்திருப்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா (Mahindra) பிடித்துள்ளது. இந்த 2025ஆம் ஆண்டு கார்கள் விற்பனையில் ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகிய இரு நிறுவனங்களையும் முந்தி இந்த இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது.

mahindra finishing 2025 in 2nd

இந்த 2025ஆம் ஆண்டில், மஹிந்திரா மொத்தம் 5.81 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2024ஆம் ஆண்டில் மஹிந்திரா விற்பனை செய்த 4.90 லட்சம் கார்களை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதன் மூலம், கடந்த ஆண்டு நான்காம் இடத்தில் இருந்த மஹிந்திரா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இது இந்தியாவில் உள்ள 16 கார் தயாரிப்பு நிறுவனங்களில் மிகப்பெரிய வளர்ச்சி கண்ட நிறுவனமாக மஹிந்திராவை முன்னிறுத்தி உள்ளது. 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 5,74,657 யூனிட்டுகள் ஆகும். இது ஆண்டுக்கு ஆண்டு 18 சதவீதம் அதிகரிப்பாகும். டாடா மோட்டார்ஸ் 5.52 லட்சம் கார்கள் விற்பனை உடன் இதற்கடுத்த நிலையில் உள்ளது.

mahindra finishing 2025 in 2nd

இந்த டிசம்பர் மாத விற்பனையையும் சேர்த்தாலும் டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்துடன் இந்த 2025ஆம் வருடத்தை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில், ஹூண்டாயை (5.50 லட்சம் கார்கள் விற்பனை) ஒரு சிறிய வித்தியாசத்தில் டாடா மோட்டார்ஸ் முந்தியுள்ளது. பல ஆண்டுகளாக இரண்டாவது இடத்தில் இருந்த ஹூண்டாய், இந்த முறை நான்காம் இடத்திற்கு சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திராவின் இந்த வளர்ச்சிக்கு, அதன் வலிமையான எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கான தேவை முக்கிய காரணம் ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ (Scorpio), பொலிரோ (Bolero), தார் (Thar) மற்றும் எக்ஸ்யூவி (XUV) போன்ற மாடல்கள் இந்த ஆண்டு முழுவதும் சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் 2025இல் மஹிந்திராவின் அதிகம் விற்பனையான கார்களாக விளங்குகின்றன.

mahindra finishing 2025 in 2nd

இவை மொத்தம் 1,61,103 யூனிட்டுகள் விற்பனை உடன் மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனையில் 28 சதவீத பங்கை கொண்டுள்ளன. இந்த கார்களின் இந்த ஆண்டின் விற்பனை ஆனது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் வளர்ச்சியை காட்டுகிறது. ஸ்கார்பியோ கார்களுக்கு அடுத்து 2025இல் மஹிந்திரா அதிகம் விற்பனை செய்த காராக தார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஆண்டில் மஹிந்திராவின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, தார் பிராண்டின் எழுச்சி ஆகும். மூன்று கதவு தார் மற்றும் ஐந்து கதவு தார் ராக்ஸ் ஆகியவற்றின் இந்த ஆண்டின் ஒருங்கிணைந்த விற்பனை எண்ணிக்கை 1,07,326 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது 2024ஆம் ஆண்டை காட்டிலும் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தார் குடும்பம் மாடல் வாரியான பட்டியலில் கடந்த ஆண்டின் நான்காம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

மஹிந்திரா கார்கள்-வாரியாக வாகன பதிவுகள் (Jan–Nov 2025)
Model Units Sold % Share
Scorpio 1,61,103 28.03
Thar 1,07,326 18.67
Bolero 93,436 16.25
3XO 90,608 15.76
XUV700 80,251 13.96
BE 6, XEV 9e 38,841 6.75
XUV400 2,764 0.48
Marazzo 328 0.05
TOTAL 5,74,657 100

Table Source: Autocarindia

மேலும் மொத்த தார் விற்பனையில் தார் ராக்ஸ் சுமார் 65 சதவீதம் பங்களிப்பை அளித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மஹிந்திரா விற்பனை செய்துள்ள 5,74,657 கார்களில் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவை மட்டும் 93,436 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் 16 சதவீத பங்கை பெற்றுள்ளன.

பொலிரோ கார்களின் விற்பனை பெரும்பாலும் சிறு நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் இருந்து கிடைத்துள்ளது. இவற்றிற்கு அடுத்து, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) காம்பாக்ட் எஸ்யூவி கார் 90,608 யூனிட்டுகள் விற்பனையை பதிவு செய்து, 2024 ஆண்டை காட்டிலும் 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதுவும் மஹிந்திராவின் மொத்த கார்கள் விற்பனையில் கிட்டத்தட்ட 16 சதவீத பங்களிப்பை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தை மெல்ல மெல்ல எஸ்யூவி கார்களுக்கான சந்தையாக மாறி வருவது, முழுமையாக எஸ்யூவி கார்களை மட்டுமே வழங்கும் மஹிந்திராவுக்கு பெரிதும் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பொலிரோ மற்றும் ஸ்கார்பியோ போன்ற நீண்ட காலமாக விற்பனையில் உள்ள மஹிந்திரா கார் மாடல்கள், மெட்ரோ அல்லாத நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் தொடர்ந்து அதிக தேவையுடன் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 30, 2025, 22:44 [IST]
English summary
Mahindra finishing year 2025 with 2nd spot in car sales next to maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X