மஹிந்திரா தார் காரை விற்பனையில் இருந்து வெளியேத்திட்டாங்களா.. ஷாக்கை குறைக்க முடியாமல் தார் காதலர்கள்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக தார் எஸ்யூவி (Thar SUV) இருக்கின்றது. இது ஓர் ஆஃப்ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதற்கு எஸ்யூவி மற்றும் ஆஃப்-ரோடு கார் பிரியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே விற்பனையில் இருந்து மஹிந்திரா நிறுவனம் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தார் கார் காதலர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

தார் கார் மாடலை மொத்தமாக நிறுவனம் விற்பனையில் இருந்து வெளியேற்றவில்லை. குறிப்பிட்ட சில வேரியண்டுகளை மட்டுமே அது விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. முன்னதாக 19 வேரியண்டுகளாக இருந்த தார் கார் மாடலின் தேர்வு, நிறுவனத்தின் நடவடிக்கையால், தற்போது 11 வேரியண்டுகளாக குறைந்திருக்கின்றது.

Mahindra has reduced its thar range

ஆமாங்க, மொத்தமாக 8 வேரியண்டுகளை மஹிந்திரா நிறுவனம் தார் கார் மாடலில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. அதிகம் வரவேற்பைப் பெறாத வேரியண்டுகளையே குறி வைத்து அது விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. நடு நிலை மற்றும் உயர் நிலை தேர்வுகளிலேயே அது கை வைத்திருக்கின்றது.

அதாவது அதிக விலைக் கொண்ட வேரியண்டுகளையே அது விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைத்து வந்த ஏஎக்ஸ் (ஓ) 4 வீல் டிரைவ் கன்வெர்டபிள் (AX (O) 4WD Convertible) மற்றும் எல்எக்ஸ் ஏடி 4 வீல் டிரைவ் கன்வெர்டபிள் (LX AT 4WD Convertible) ஆகிய வேரியண்டுகளை அது விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது.

Mahindra thar off-roading capacity

இதேபோல், 2.2 லிட்டர் டீசல் மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைத்து வந்த ஏஎக்ஸ் ஓ 4 வீல்டிரைவ் கன்வெர்டபிள் (AX (O) 4WD Convertible) மற்றும் 4 வீல்டிரைவ் ஹார்ட் டாப் (4WD Hard Top), எல்எக்ஸ் 4 வீல்டிரைவ் கன்வெர்டபிள் (LX 4WD Convertible) மற்றும் 4 வீல் டிரைவ் ஹார்ட் டாப் ஓடி (LX 4WD Hard Top OD) ஆகியவற்றையும் அது விற்பனையில் இருந்து அகற்றி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல 2.0 லிட்டர் டீசல் மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைத்து வந்த எல்எக்ஸ் ஏடி 4 வீல் டிரைவ் ஹார்ட் டாப் ஓடி (LX AT 4WD Hard Top OD) மற்றும் எல்எக்ஸ் ஏடி 4 வீல் டிரைவ் கன்வெர்டபிள் (LX AT 4WD Convertible) ஆகிய வேரியண்டுகளையும் சேர்த்தே அது விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது.

இந்த வேரியண்டுகளை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்டுகளும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றே தார் எஸ்யூவி ஆகும். இந்த கார் மாடல் நாட்டில் ரூ. 11.50 லட்சம் முதல் ரூ. 17.60 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை வருகின்ற 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கும் மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் தார் எஸ்யூவி-யும் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே வரவேற்பைப் பெற தேர்வுகளை விற்பனையில் இருந்து அந்நிறுவனம் அகற்றி இருக்கின்றது. இதேபோல், இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு விரைவில் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 25, 2025, 23:44 [IST]
English summary
Mahindra has reduced its thar range by discontinuing some top variants more details here
மேலும்... #mahindra #mahindra thar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+