12 லட்ச ரூபா காரிலேயே இது எல்லாம் கிடைக்குதா? மஹிந்திரா கொண்டுவந்த புது அப்டேட்டால் கஸ்டமர்ஸ் குவிய போறாங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சிறப்பாக விற்பனையாகி வரும் கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஆனது முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 (XUV300) காருக்கு மாற்றாக மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் புதியதாக ஒரு அசத்தலான அப்டேட்டை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
இன்றைய காலத்தில் புதியதாக கார் வாங்குபவர்கள் காரில் எதிர்பார்க்கும் அம்சங்களுள் ஒன்று, சிறப்பான சவுண்ட் ஆடியோ சிஸ்டம் (Sound Audio System) ஆகும். அதாவது, பயணத்தின் போது பாடல்களை கேட்பதற்கும், கார் குறித்த எச்சரிக்கைகளை பெறுவதற்கும் பயன்படும் ஆடியோ சிஸ்டம் ஆகும்.

காரில் பாடல்களை கேட்டப்படி பயணம் செய்ய விரும்புவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப கார் ஆடியோ சிஸ்டத்தை சிறப்பானதாக வழங்கவே அனைத்து கார் நிறுவனங்களும் விரும்புகின்றன. காருக்கான ஆடியோ சிஸ்டத்தை பெரும்பாலான கார் கம்பெனிகள் வெளியில் இருந்துதான் வாங்குகின்றன. சில கார் கம்பெனிகள் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கின்றன.
மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு வெளியில் இருந்துதான் ஆடியோ சிஸ்டங்களை வாங்குகிறது. அந்த வகையில் தற்போது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் இருந்துதான் ஆடியோ சிஸ்டம் வாங்கப்பட்டு உள்ளது. ஆனால், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு வழங்கப்பட்டு இருப்பது பிரீமியம் தரத்திலான டோல்பி அட்மஸ் (Dolby Atmos) சவுண்ட் சிஸ்டம் ஆகும்.

டோல்பி அட்மஸ் ஆனது உலகளவில் பல துறைகளில் ஆடியோ சிஸ்டத்திற்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழிற்நுட்பம் ஆகும். மற்ற ஆடியோ தொழிற்நுட்பங்களை காட்டிலும் இரைச்சலற்ற ஒலியை வழங்கக்கூடியதாக டோல்பி அட்மஸ் விளங்குகிறது. இத்தகைய டோல்பி சவுண்ட் சிஸ்டத்தை ரூ.12 லட்சத்திற்குள் பெற்றுள்ள முதல் கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என கூறப்படுகிறது.
டோல்பி அட்மஸ் சவுண்ட் சிஸ்டம் ஆனது மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெவ் எக்ஸ் ஏ (REVX A) வேரியண்ட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டோல்பி அட்மஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் குறைந்த விலையில் இந்த மஹிந்திரா காரை வாங்க வேண்டும் எனில் ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட்டை வாங்க வேண்டும்.
எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் ஏ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) தற்சமயம் ரூ.11.79 லட்சமாக உள்ளது. இது இல்லாமல், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலைமிக்க ஏ.எக்ஸ்5 எல் (AX5 L), ஏஎக்ஸ்7 (AX7) மற்றும் ஏஎக்ஸ்7 எல் (AX7 L) வேரியண்ட்களிலும் டோல்பி அட்மஸ் சவுண்ட் சிஸ்டம் கிடைக்கும். இவை ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட்டை காட்டிலும் விலைமிக்கவை ஆகும்.
எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் டோல்பி அட்மஸ் சவுண்ட் சிஸ்டம் ஆனது மூன்று பரிமாணங்களில் ஒலியை வெளியிடக் கூடியதாக பொருத்தப்பட்டுள்ளது. காருக்குள் கேபினை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள ஆறு ஸ்பீக்கர்கள் (Speakers) வாயிலாக டோல்பி சவுண்ட் சிஸ்டம் ஒலியை வழங்கும். எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலைமிக்க ஏ.எக்ஸ்7 எல் வேரியண்ட்டில் கூடுதலாக சப்வூப்பர் (Subwoofer) கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டோல்பி அட்மஸ் சவுண்ட் சிஸ்டம் என்றாலே ஒரு சமயத்தில் லக்சரி கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.12 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்படும் கார்களில் கூட வழங்கப்பட ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் தொழிற்நுட்ப வசதிகள் மேம்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications








