7 பேருடன் குடும்பமாக போக சரியான கார்! மஹிந்திராவில் இருந்து விற்க ஆரம்பித்து இருக்காங்க!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 (XUV700) ஆகும். இந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக, புதிய 'எபோனி எடிசன்' (Ebony Edition) எக்ஸ்யூவி700 காரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எபோனி என்பது கருமை நிறத்தை குறிக்கிறது. அதற்கு ஏற்ப புதிய எக்ஸ்யூவி700 எபோனி எடிசன் கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 17ஆம் தேதியான இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எக்ஸ்யூவி700 எபோனி எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப விலையே ஆகும். அதிகப்பட்சமாக ரூ.24.14 லட்சம் வரையில் இந்த காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு குறிப்பிடப்பட்டு இருப்பவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் அதிகமாக வரும்.

mahindra introduced xuv700 ebony edition

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வாரங்களாக அதன் கார்களில் புதியதாக பிளாக் எடிசன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்த வரிசையில், எக்ஸ்யூவி700 கார் அதன் பிளாக் எடிசனை பெற்றுள்ளது. ஆனால், இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிளாக் எடிசன் கார்களுக்கும், எக்ஸ்யூவி700 காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எபோனி எடிசனுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது. அந்த பிளாக் எடிசன்களை காட்டிலும் மேம்பட்டதாக எபோனி எடிசன் உள்ளது.

மேலும், எக்ஸ்யூவி700 காரின் மற்ற வேரியண்ட்களை காட்டிலும் மேம்பட்ட உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை கொண்டதாக புதிய எபோனி எடிசன் விளங்குகிறது. இருப்பினும், மெக்கானிக்கல் பாகங்களில் எக்ஸ்யூவி700 காரையே இந்த ஸ்பெஷல் எடிசன் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஏ.எக்ஸ்7 மற்றும் ஏ.எக்ஸ்7 எல் வேரியண்ட்களின் அடிப்படையிலானதாக புதிய எபோனி எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது.

mahindra introduced xuv700 ebony edition

அதாவது, எக்ஸ்யூவி700 காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களான ஏ.எக்ஸ்7 மற்றும் ஏ.எக்ஸ்7 எல் வேரியண்ட்களில் அனைத்தும் அம்சங்களும் அப்படியே புதிய எபோனி எடிசனிலும் கிடைக்கும். 7 இருக்கைகள் உடன் மட்டுமே கிடைக்கும் ஏ.எக்ஸ்7 மற்றும் ஏ.எக்ஸ்7 எல் வேரியண்ட்களில் என்ஜினின் ஆற்றல் ஆனது முன் சக்கரங்களுக்கு செல்கின்றன. இந்த வேரியண்ட்கள் இரண்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.

இந்த புதிய ஸ்பெஷல் எடிசனின் வெளிப்புறத்தில் ஸ்டீல்த் கருப்பு நிறத்தில் பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 18-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்பட காரின் வெளிப்பக்கம் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது. காரை சுற்றிலும் வழங்கப்பட்டிருக்கும் விளக்குகள் மற்றும் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்கிட் பிளேட் மட்டுமே காரில் பளிச்சென்று தனியாக தெரிகின்றன.

mahindra introduced xuv700 ebony edition

காரின் முன்பக்கத்திற்கு அடியில் பிரஷ்டு செய்யப்பட்ட ஃபினிஷிங்கில் சில்வர் நிறத்தில் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கத்தை போலவே, இந்த எபோனி எடிசனின் உட்புறமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காருக்கு உள்ளேயும் ஆங்காங்கே சில்வர் நிறத்தை பார்க்க முடிகிறது.

காருக்குள் செண்டர் கன்சோல் மற்றும் டோர் பேனல்கள் உள்ளிட்டவை சில்வர் நிறத்தில் உள்ளன. அதேநேரம், காருக்குள் மேற்கூரை வித்தியாசமாக லைட் கிரே நிறத்தில் இருப்பது இந்த காருக்குள் அமர்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். இவை மட்டுமின்றி, காருக்குள் ஏசி காற்று துளைகளுக்கு டார்க் க்ரோம் வழங்கப்பட்டு இருப்பதும் கவனத்தை ஈர்க்கிறது.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையை அதிகரிக்க இவ்வாறு புதிய ஸ்பெஷல் எடிசன்களை அவ்வப்போது அறிமுகம் செய்வது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் நாம் மஹிந்திராவை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மறக்காது இவ்வாறு ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்து விடுகிறது.

FAQs
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் இருக்கை ஆப்ஷன்கள் என்னென்ன?

5-சீட்டர், 6-சீட்டர் & 7-சீட்டர்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் என்ன?

ரூ.13.99 லட்சம் - ரூ.25.14 லட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்கள் என்னென்ன?

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல்

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 15:48 [IST]
English summary
Mahindra introduced xuv700 ebony edition price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X