ஸ்கார்பியோவுக்கு இன்னும் மவுசு குறையல.. விற்பனை 2 லட்சத்தை தாண்டிருச்சு..

எஸ்யூவி (SUV) கார்களின் பெரியப்பா-வாக ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் மாடல் பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடலே விற்பனையில் புதிய சாதனையைப் படைத்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 லட்சம் யூனிட்டுகள் வரை அது விற்பனையாகி இருப்பதாகவே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஸ்கார்பியோ கார் மாடல் இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) , பழைய ஸ்கார்பியோவை பிரதிபலிக்கக் கூடிய வெர்ஷன் இது ஆகும்.

ஸ்கார்பியோ என், பெரிய உருவம் மற்றும் புதிய தலைமறைக்கு ஏற்ற ஸ்டைலை கொண்ட வெர்ஷனே இது ஆகும். இதுவே தற்போது விற்பனையில் சிறப்பான சாதனையைப் படைத்திருக்கின்றது. இதன் வாயிலாக ஸ்கார்பியோ காருக்கு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கும் மவுசு குறையாமல் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Mahindra scorpio-n carbon edition celebrates sales milestone

இதை முன்னிட்டு தற்போது புதிய சிறப்பு பதிப்பை இந்த கார் மாடலில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. அதாவது, இரண்டு லட்சம் யூனிட்டுகள் ஸ்கார்பியோ என் விற்பனையைக் கொண்டாடும் விதமாக ஸ்கார்பியோ என் கார் மாடலில் கார்பன் எடிசன் எனும் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது சந்தையில் ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான ஸ்கார்பியோ என்-ஐ விட அதிக கவர்ச்சியானதாகவும், புதிய வண்ணத்தாலும் இந்த சிறப்பு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மெட்டாலிக் கருப்பு நிறத்தாலேயே ஸ்கார்பியோ என் கார்பன் பதிப்பு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

Mahindra scorpio-n carbon edition seat

இத்துடன், ஸ்மோக்கட் குரோம் அக்சென்டுகள், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் எதிர்மறையான நிற தையலால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் ஆகியவற்றாலும் இந்த கார் மாடல் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஆகையால், கருப்பு நிறத்தை அதிகம் விரும்புவோரை இந்த கார் கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் இரண்டு விதமான வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இசட்8 மற்றும் இசட் 8எல் 7 சீட்டர் ஆகியவையே அவை ஆகும். பெட்ரோல், டீசல் இரண்டு ஆப்ஷன்களும் இதில் உண்டு என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், இதில் மேனுவல், ஆட்டோமேட்டிக் ஆகிய ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

Mahindra scorpio-n carbon edition interior

ரூ. 19.19 லட்சம் தொடங்கி ரூ. 24.89 லட்சம் வரையிலான விலையிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வழக்கமான ஸ்கார்பியோ என் கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த காரில் அலங்கார மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் மஹிந்திரா நிறுவனம் செய்யவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் இதில் காண முடியாது.
2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க்க கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஸ்கார்பியோ-வும் ஒன்றாக இருக்கின்றது என்பது இப்போதைய 2 லட்சம் யூனிட் விற்பனையின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. இதன் வாயிலாக இந்திய எஸ்யூவி கார் உலகின் பெரியப்பா என்பதை மீண்டும் ஸ்கார்பியோ என் உறுதி செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2025, 19:49 [IST]
English summary
Mahindra launches scorpio n carbon edition to celebrate 200 000 sales milestone of the iconic suv
மேலும்... #mahindra #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X