மஹிந்திரா காரை இன்னும் கம்மியான விலையில் வாங்க வாய்ப்பு கிடைச்சு இருக்கு! காரின் விலை ரூ.8.94 லட்சம் தான்...

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார், எக்ஸ்.யூ.வி 3எக்ஸ்ஓ (XUV 3XO) ஆகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (XUV300) காருக்கு பதிலாக அப்டேட்டான தோற்றத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதை விட இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரதாப் போஸ் (Pratap Bose) அவர்கள் மஹிந்திராவுக்கு மாறிய பின்னர் உருவாக்கிய முதல் மஹிந்திரா கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் புதியதாக சில வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எம்.எக்ஸ்1 (MX1), எம்.எக்ஸ்2 (MX2), எம்.எக்ஸ்3 (MX3), ஏ.எக்ஸ்5 (AX5) மற்றும் ஏ.எக்ஸ்7 (AX7) உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டுவரும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் இனி ரெவ் எக்ஸ் (RevX) வேரியண்ட்களிலும் கிடைக்கும். ரெவ் எக்ஸ் எம் மற்றும் ரெவ் எக்ஸ் ஏ என மொத்தம் இரண்டு ரெவ் எக்ஸ் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

mahindra xuv 3xo revx variants

இந்த புதிய ரெவ் எக்ஸ் வேரியண்ட்கள் இரண்டும் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். டீசல் என்ஜின் உடன் கிடைக்காது. பெட்ரோல் என்ஜின் உடன் இதில் ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட் குறைந்த விலையில் மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox) ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும். அதுவே, ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட் ஆட்டோமேட்டிக் (Automatic) கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

இந்த புதிய ரெவ் எக்ஸ் வேரியண்ட்கள் முக்கியமாக குறைந்த விலையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்க விரும்புபவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக, ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை காட்டிலும் குறைந்த விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்க விரும்புபவர்களுக்காக எம்.எக்ஸ்1 வேரியண்ட் உள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் எம்.எக்ஸ்1 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் ஆகும். எம்.எக்ஸ்2 புரோ வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட்டின் விலை ரூ.60 ஆயிரம் அளவிற்கு குறைவு ஆகும். அதற்கேற்ப எம்.எக்ஸ்2 புரோ வேரியண்ட்டில் கூடுதலாக தொழிற்நுட்ப வசதிகள் கிடைக்கும்.

mahindra xuv 3xo revx variants

இந்த ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட்டை கூடுதல் ஆக்ஸஸரீகள் உடனும் வாங்கலாம். ரெவ் எக்ஸ் எம் (ஆப்ஷ்னல்) என அழைக்கப்படும் அந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.9.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.11.79 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.12.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட்களில் அதிகப்பட்சமாக 111 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் பொருத்தப்படுகிறது. அதுவே, ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட்டில் சற்று கூடுதலாக 131 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்‌ஷன் டர்போ-பெட்ரோல் என்ஜின் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் புதிய ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஏஎக்ஸ்5 வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டது ஆகும். சற்று கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் உடன், அதற்கேற்ப கூடுதல் விலையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்க விரும்புபவர்கள் இந்த ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட்டை வாங்கலாம். அதேநேரம், குறைந்த விலையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்க விரும்புவர்களுக்கு புதிய ரெவ் எக்ஸ் எம் வேரியண்ட்டை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 20:40 [IST]
English summary
Mahindra launches xuv 3xo revx variants check price features all details here
மேலும்... #mahindra #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+