24 நொடியில் 10 % சார்ஜ் ஏறிடும்! மஹிந்திரா எலெக்ட்ரிக் ரேஸ் காரை பற்றி தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் இன்று தனது ஃபோர்முலா கார் பந்தையத்திற்காக பயன்படுத்தும் எம்12 எலெக்ட்ரோ என்ற காரை வெளியிட்டுள்ளது.இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா ரேஸ் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் 2030ம் ஆண்டு வரை நடக்கம் பந்தையத்தில் கலந்து கொள்ள தயாராகிவிட்ட செய்தியையும் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த விரவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா ரேஸிங் என்ற எலெக்ட்ரிக் வாகன கார் பந்தைய அணியை நடத்தி வருகிறது. இந்த அணி பயன்படுத்தும் கார்களை அந்நிறுவனமே தயாரிக்கிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா கார் பந்தையமான ஃபார்முலா இ பந்தையத்தில் இந்த அணி தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறது. கடந்த12 ஆண்டுகளாக இந்த போட்டி துவங்கப்பட்ட காலம் முதல் கலந்து கொண்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே இந்திய அணிஇது தான்.

Mahindra M12 Electro Unveiled

இதுவரை இந்த அணி 29 முறை போடியத்தை பிடித்துள்ளது. 11 போல் போசிஷன் மற்றும் 1000 சாம்பியன்ஷிப் பாயிண்ட்களையும் பெற்றுள்ளது. கடந்த முறை நடந்த 11 வது சீசனில் இந்த அணி 4வது இடத்தை பிடித்தது. இதில் அந்நிறுவனத்திற்காக கார் ஓட்டிய டிரைவர்கள் 5 போடியம்களை பிடித்தனர். இதற்காக எம் 11 எலெக்ட்ரிக் ரோ என்ற காரை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டி வரும் 2026ம் ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சீசனில் 5ம் தலைமுறைக்கு மாறுகிறது. இதற்காக அந்நிறுவனம் எம் 12 எலெக்ட்ரோ என்ற காரை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூருவில் ஸ்கிரீம் எலெக்ட்ரிக் என்ற பெயரில் அந்நிறுவனம் நடத்தி வரும் நிகழ்வில் மஹிந்திரா ரேஸிங்கிற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் இந்த வாகனத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Mahindra M12 Electro Unveiled

இந்நிறுவனம் இந்த காரை மெட்டாலிக் ரெட், கிளாஸி ஒயிட், மற்றும் கார்பன் பிளாக் நிறத்தில் வடிவமைத்துள்ளது.இதில் 12 கோடுகள் டிசைன்களாக வழங்கப்பட்டுள்ளது. இது மஹிந்திரா நிறுவனம் 12 ஆண்டுகளாக ஃபார்முலா இ போட்டியில் பங்கேற்பதை காட்டுகிறது. மேலும் இந்த காரில் இந்திய தேசியக்கொடியையும் பொறித்துள்ளது. இந்தியாவிலிருந்து பங்கேற்கும் அணி என்பதால் பெருமையுடன் இதை செய்துள்ளது.

இந்த கார் டிரைவருடன் சேர்த்து மொத்தமே 860 கிலோ எடை கொண்டதாக தான் இருக்கும். மேலும் பேட்டரியில் உள்ள பவர் 98 சதவீதம் வீலுக்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய 600KW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்த முடியும். இது 10 சதவீத சார்ஜை வெறும் 24 நொடியில் ஏற்றிவிடும். இந்த கார் அதிகபட்சம் 200 மைல் வேகம் அதாவது 322 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

Mahindra M12 Electro Unveiled

இந்த கார் 0-60 மைல் வேகம் அதாவது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 1.82 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தகுதிசுற்று மோடில் இருக்கும் போது 4 வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை தான் அடுத்த தலைமுறை ரேஸிங்கில் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த சீசனில் தனது புள்ளிகளை மூன்று மடங்காக்கியுள்ளது. மோனாக்கோ, ஜகர்தா, பெர்லிங், லண்டன் ஆகிய பகுதிகளில் நடந்த போட்டிகளில் போடியம்களைபிடித்துளு்ளது. கடந்த சீசனில் ஒட்டு மொத்தமாக 4வது இடத்தை பிடித்தத. இது அந்த அணிக்கான மிகப்பெரிய கம்பேக்காக பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனிலும் அதே ஓட்டுநர்களே தொடப்போகிறார்கள். இந்த டிரைவர்கள் இதுவரை 181 ரேஸ்களில் பங்கேற்றுள்ளனர். இதில் 10 போட்டிகளில் வெற்றியும், 22 போடியம்களையும் பிடித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்நிறுவனம் இந்த எம்12 காருக்கு கியர் பாக்ஸ் விஷயங்களுக்காக வால்வோலைன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த சீனால் எடுத்த தலைமுறை கியர் பாக்ஸ் தொழிற்நுட்பத்தைஅந்நிறுவனம் வழங்குகிறது.இதன் மூலம் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 26, 2025, 18:45 [IST]
English summary
Mahindra m12 electro unveiled india formula e racer
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X