7 பேர் குடும்பமா போகும் காரை 3 பேர் தான் வாங்கியிருக்காங்க! ஏன் தெரியுமா?
மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார் நீண்ட காலமாக குறைவான விற்பனையையே சந்தித்து வருகிறது. இருந்தாலும் இந்த காரின் விற்பனை அந்நிறுவனம் தொடர்ந்து நிறுத்தாமல் செய்து வருகிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையில் 2 இலக்கத்தை கூட தொட முடியவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற வாகனங்கள் சிறப்பான விற்பனையை சந்தித்து வருகின்றன. கொரோனாவிற்கு பிறகு இந்த ரக வாகனங்களின் விற்பவனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற வாகனமாக இருந்தாலே நல்ல விற்பனையாகும் என்று இருந்த நிலையில் மஹிந்திராவின் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றகார் ஒன்றின் விற்பனை மிகக்குறைவாக பதிவாகியுள்ளது.

மஹிந்திராவின் 7 சீட்டர் எம்பிவி காரான மராஸோ கார் நீண்ட காலமாக விற்பவனையில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மழுவதும் இந்த காரை வெறும் 3 பேர் தான் வாங்கியுள்ளனர். இரட்டை இலக்கத்தில் கூட விற்பனை நடக்கவில்லை. இவ்வளவு மோசமான விற்பனை நடப்பது இது முதல் முறை அல்ல. இந்த வருட துவக்கத்தில் ஜனவரி மாதம் ஒரு கார் கூட விற்பனையாகாத நிலை ஏற்பட்டது.
இந்த 2025ம் ஆண்டு முழுவதுமே வெறும் 279 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் கடந்த ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 176 கார்கள் விற்பனையானதால் இந்த அளவிற்காவது விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 0 கார்களும், பிப்ரவரி மாதம், 17 கார்களும், மார்ச் மாதம் 10 கார்களும், ஏப்ரல் மாதம் 6 கார்களும், மே மாதம் 4 கார்களும், ஜூன் மாதம் 17 கார்களும், ஜூலை மாதம் 176 கார்களும், ஆகஸ்ட் மாதம் 46 கார்களும், செப்டம்பர் மாதம் 3 கார்களும் விற்பனவையாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தாண்டில் மிக குறைவான விற்பனையை பெற்ற 2வது மாதமாக மாறியுள்ளது.

மஹிந்திரா மராஸோ காரை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 எச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்பக்க பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள்உள்ளன. மேலும் இந்த காரில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிறா்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரிமோட் கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், சென்ரல் ஏசி, 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் 7 பேர் பயணிக்க முடியும். ஆனால் நீண்டகாலமாக பெரிய அப்டேட்கள் இல்லை,நவீன கார்களில் உள்ள அம்சங்கள் இல்லை. இந்த காரில் பெரிய அளவில் மாற்றங்கள் வராததால் பழைய லுக்கில் உள்ளது. இதன் காரணமாகவும் விற்பனை குறைந்தள்ளது. இந்த விற்பனையை அதிகரிக்க ரூ70,000 தள்ளுபடி ரூ20,000 மதிப்பிலான இலவச ஆக்சஸரீஸ்கள் வழங்கப்பட்டாலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் விற்பனையை நிறுத்தவும் இல்லை, அதே நேரம் அப்டேட் செய்யவும் இல்லை என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்படால் நிச்சயம் மார்கெட்டில் போட்டியில் விற்பனையாகும் கார்களை தாண்டி சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









