8 பேர் தாராளமா போகலாம், 17 கி.மீ மைலேஜ் வேற தருது! இந்த கார் விற்பனை டபுள் ஆகிடுச்சு!
சில மாதங்கள் முன்பு வரை மஹிந்திரா நிறுவனம் தனது மராஸோ காரின் விற்பனையை நிறுத்தப்போகிறது என்ற பேச்சு எழுந்தது. இதனால் நாம் கார் எந்நேரம் வேண்டுமானாலும் நிறுத்தப்படாலாம் என நினைத்தோம். ஆனால் மாறாக இந்த காரின் விற்பவவனை கடந்த 6 மாதங்களில் டபுள் மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று மார்கெட்டில் எஸ்யூவி கார்களக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. அதற்கு ஏற்றபடி மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ, தார், எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் எம்பிவி செக்மெண்டில் மராஸோ என்ற காரை விற்பவனை செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார் விற்பவனையாகி வருகிறது.

இதனால் இந்த கார் விற்பனையிலிருந்து எந்நேரம் வேண்டுமானாலும் நீக்கப்படாலம் என தகவல்கள் வெளியானது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்த காரின் தயாரிப்பையும் நிறுத்தவில்லை. குறைந்த எண்ணிக்கையில் விற்பனையானாலும் இந்த கார் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த நிதியாண்டிற்கான முதல் அரையாண்டு விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை மராஸோ கார் பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது நடப்பு காலாண்டில் 227 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரிப்பு நடந்துள்ளது.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த மஹிந்திரா மராஸோ கார் சிறப்பான ரைடு கம்ஃபோர்ட், தரமான உட்புற கட்டமைப்பு, 4 ஸ்டார் கொண்ட குளோபல் என்கேப் பாதுகாப்பு ரேட்டிங், மாருதி எர்டிகா, இன்னோவா கிரைஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகியவற்றை கலவையில் இந்த கார் இருக்கிறது. 17.3 கி.மீ மைலேஜ் மற்றும் 8 சீட்டர் இருப்பது தான் இந்த காரை மக்கள் விரும்ப முக்கியமான காரணம்.

குடும்பத்துடன் பயணிக்கும் கார் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையானாலும் இந்த கார் விற்பனை மிக குறைவாகவே இருக்கிறது.இந்தகாரில் நீண்ட காலமாக பெரிய அப்டேட் இல்லை. நவீன கார்களில் உள்ள வசதிகள் இதில் இல்லாதது விற்பனை குறைவிற்கு முக்கியமான காரணம். இந்த கார் அப்டேட் செய்யப்பட்டால் மிகப்பெரிய அளவிற்கு விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் சிறப்பான வளர்ச்சியை பெற்றதற்கு கடந்தாண்டு மிக மோசமான விற்பனை நடந்தது தான் காரமாக இருக்கிறது. மிக குறைவான விற்பனை கடந்தாண்டு பதிவானதால் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளதால் மிகப்பெரிய வளர்ச்சி தோற்றம் இருக்கிறது. தொடர்ந்து இந்த கார் சிறப்பாக விற்பனையாகவேண்டும் என்றால் இதில் நவீன அம்சங்களுடன் அப்டேட்கள் வரவேண்டும்.


Click it and Unblock the Notifications









