8 சீட்டர், 17கி.மீ மைலேஜ், கம்மி விலை, இவ்வளவும் இருந்தும் இந்த காரை வெறும் 17 பேர் தான் வாங்கியிருக்காங்க!

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் கடந்த ஓரு ஆண்டில் இல்லாத அளவிற்கு அதிகமான விற்பனையை பெற்றது. இந்நிறுவனம் மொத்தம் 47,306 கார்களை கடந்த ஜூன் மாதம் மட்டும் விற்பனை செய்துள்ளது.ஆனால் அந்நிறுவனத்தின் ஒரு காரை வெறும் 12 பேர் மட்டுமே வாங்கியுள்ளனர். இந்த கார் குறித்த விரிவான விபரங்களையும் தகவல்களையும் காணலாம் வாருங்கள்

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 40,022 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் 7 ஆயிரம் கார்கள் அதிகமாக விற்பனவையாகியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஸ்கார்பியோ தான். மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது.

Mahindra Marazzo Sales June 2025

ஆனால் அதே நிறுவனத்தின் மராஸோ என்ற கார் மிக குறைவான விலையில் விற்பனையாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த மராஸோ காரை வெறும் 17 வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்கியுள்ளனர். மஹிந்திரா நிறுவனத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் என்றால் இந்த கார் தான்.

கடந்த நிதியாண்டு முழுவதுமே வெறும் 1656 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. அதாவது மாதம் சுமார் 14 கார்கள் மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. நீண்ட காலமாக இந்த காரின் விற்பனை குறைவாக இருந்தாலும் மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து மராஸோ காரை விற்பனை செய்து வருகிறது.

Mahindra Marazzo Sales June 2025

மராஸோ காரை பொருத்தவரை ரூ14.59 லட்சம் முதல் ரூ17 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்துள்ளது. இந்த கார் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மாருதி எர்டிகா, டொயோட்டா இன்னோவா, கியா கேரன்ஸ்,ரெனால்ட் டிரைபர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

கடந்த 6 மாத விற்பனை விபரங்களை பார்த்தால் கடந்த ஜனவரி மாதம் ஒர கார் கூடவிற்பனையாகவில்லை. பிப்ரவரி மாதம் 17 கார்கள், மார்ச் மாதம் 10 கார்கள் ஏப்ரல் மாதம் 6 கார்கள், மே மாதம் 4 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த ஜூன் மாதம் சற்று விற்பனை அதிகரித்து 17 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதம் 7 கார்கள் தான் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Mahindra Marazzo Sales June 2025

மஹிந்திர மராஸோ காரை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இந்த இன்ஜின் 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையம் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளுது. இந்த காரில் பாதுகாப்பிற்காக ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, பின்பக்க பார்க்கிங் சென்சார், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விற்பனை குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அப்டேட் இல்லாததாது தான். இந்த கார் விற்பனையாகும் விலையில் நவீன அம்சங்களுடன் பல கார்கள் மார்கெட்டில் கிடைப்பதால் மக்கள் அந்த கார்களை தேர்வு செய்கின்றனர். இந்த காரையும் அந்நிறுவனம் அப்படேட் செய்தால் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 16:40 [IST]
English summary
Mahindra marazzo sales june 2025 only 17 units sold
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X