எண்ணி 4 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாமே நல்லா இருந்தும் ஏன் இந்த கார் விக்கல?
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த கார்கள் மக்களின் பெரும்பாலான தேவையை பூர்த்தி செய்வதால் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக மஹந்திரா நிறுவனத்தின் ஒரு 7 சீட்டர் காரின் விற்பனை மிக மோசமாக இருந்து வருகிறது. ஒரு இலக்க அளவிலேயே இந்த காரின் விற்பனை இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ கார் இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க சிறந்த காராக இருந்தாலும் சமீப காலமாக இந்த காரின் விற்பனை மிக மோசமாக இருக்கிறது கடந்த ஜனவரி மாதம் முதல் விற்பனை விபரங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த காரை ஒருவர் கூட வாங்கிவில்லை. பிப்ரவரி மாதம் 17 பேர் இந்த காரை வாங்கியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் 10 பேரும், ஏப்ரல் மாதம் 6 பேரும் வாங்கியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த காரை வெறும் 4 பேம் மட்டுமே இ்நத காரை வாங்கியுள்ளனர். கடந்த 5 மாத நிலவரப்படி மொத்தமே 37 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. அதாவது சராசரியாக ஒரு மாதத்திற்கு 7.4 கார்கள் விற்பனையாகியுள்ளது. இவ்வளவு குறைவாக விற்பனை எண்ணிக்கையை பெறும் அளவிற்கு இந்த காரை மோசமான கார் என சொல்லிவிட முடியாது.
மஹிந்திராவின் மராஸோ காரை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் இந்த காருக்கு 121 எச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார், உள்ளிட்ட அம்சங்களுடன் காரில் 7 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே இருக்கிறது. இது காரை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் இணைக்க முடியும் அளவில் வழங்கப்பட்டுள்ளது. இது போக காரில் கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கார் குறைவாக விற்பனையாவதால் இ்நத காருக்கான தள்ளுபடிகளையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விதமான தள்ளுபடிகளை வழங்கி இந்த காரின் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இருந்தாலும் பெரிய அளவில் விற்பனை அதிகமாகவில்லை. தற்போது ஒரு இலக்க அளவில் விற்பனை குறைந்துபோயுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த கார் நிறுத்தப்படப்போவதாக கூட வதந்திகள் வந்தது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் இதுவரை இந்த காரை நிறுத்தப்பபோவதாக எந்த வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. கார்கள் ஸ்டாக்கில் இருகு்கும் வரை இந்த கார் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் தயாரிப்பை நிறுத்தியதாகவும் இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்த காரில் போதுமான அப்டேட்டை செய்யாமல் இருக்கிறது. இந்த காரில் விலையில் இந்த காரை விட நவீன அம்சங்கள் கொண்ட கார்கள் கிடைப்பதால் மக்கள் பலர் அந்த காரை நோக்கி நேர துவங்கிவிட்டனர். வரும் காலங்களில் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு முற்றிலுமாக நவீனப்படுத்தப்பட்டால் நிச்சயம் இதன் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









