மார்க்கெட்டில் பிரபலமான பெயர் ஆச்சே, இதையா மாற்ற போறாங்க? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடிடுமா?

மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி700 (XUV700) எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், 'எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ' (XUV 7XO) என்கிற புதிய பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் எரிபொருள் என்ஜின் கார்களை உருவாக்க பயன்படுத்தப்படும் புதிய 'XUV XXO' கீழ் வரும் இரண்டாவது மாடல் இதுவாகும். முன்னதாக 'எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட்' (XUV300 Facelift) கார், 'XUV 3XO' என மறுபெயரிடப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ காரின் உலக அறிமுக விழாவை அறிவித்ததுடன், இந்த பிரதானமான எஸ்யூவி காரின் வெளிப்புற விவரங்கள் குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

mahindra xuv700 facelift named as xuv 7xo

இந்த காரின் முகப்பு விளக்குகளைச் சுற்றி 7 வடிவ பகல்நேர ரன்னிங் விளக்குகள் (DRL-கள்) மற்றும் ட்ரெபசாய்டல் LED விளக்குகள் உள்ளன. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'எக்ஸ்இவி 9எஸ்' (XEV 9S) எலெக்ட்ரிக் காரை நினைவுப்படுத்துகிறது. டெயில்லைட்டுகளும் எக்ஸ்இவி 9எஸ் காரின் மாறுபட்ட அமைப்பிலேயே உள்ளன.

மேலும், காரின் கிரில் பகுதி மஹிந்திராவின் தனித்துவமான ஸ்லேட்டட் டிசைனின் புதிய வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இதை எல்லாம் காரின் அறிமுகத்திற்கு முன்னரே எப்படி கூறுகிறோம் என்றால், எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ கார் ஏற்கனவே சிலமுறை சோதனை ஓட்டங்களின் போது அடையாளம் காணப்பட்டு இருந்தது.

mahindra xuv700 facelift named as xuv 7xo

சமீபத்திய ஸ்பை படங்களின்படி, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் தற்போதைய வடிவத்தை அப்படியே தக்கவைத்து, வெளிப்புறத்தில் மிகக் குறைந்த ஷீட்-மெட்டல் மாற்றங்களை மட்டுமே மஹிந்திரா செய்துள்ளதாகத் தெரிகிறது. எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் உட்புறம் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், மஹிந்திரா 'எக்ஸ்இவி 9இ' (XEV 9e) மற்றும் 9எஸ் கார்களில் காணப்பட்டதைப் போன்ற மூன்று திரைகள் கொண்ட டாஷ்போர்டு அமைப்பை மஹிந்திரா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ ஆனது 6 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளில் கிடைக்கும். 5 இருக்கைகள் கொண்ட மாடல் வருமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ, அதன் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எக்ஸ்யூவி700 காரைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ விற்பனை செய்யப்பட உள்ளது. இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வரும். டீசல் மாடலில் ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதியும் கிடைக்கும் எனத் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்பார்த்ததை போல், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை போன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ பெயரில் வருகிறது. இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் ஆனது டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் அல்காசர் போன்ற எஸ்யூவிகளுடன் போட்டியிடும். தற்போதைய எக்ஸ்யூவி700 காரின் விலை ரூ.13.66 லட்சம் முதல் ரூ.23.71 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. எனவே, எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் விலை இதைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 8, 2025, 20:15 [IST]
English summary
Mahindra named xuv 7xo for xuv700 facelift that will launch on 2026 january
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X