ஒரு டீசர்ல இவ்வளவு குறியீடு இருக்குதா? ரஞ்சித், மாரி செல்வராஜையே மிஞ்சிடுவாங்க போலயே!
மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தனது புதிய கார் தயாரிப்பு பிளாட்ஃபார்மை வெளியிட திட்டமிட்டுள்ளது.இந்த புதிய பிளாட்ஃபார்மில் எதிர்காலத்தில் வரப்போகும் மஹிந்திரா கார்கள் தயாராக போகிறது. இந்நிலையில் இந்த பிளாட்ஃபார்ம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தற்போது பல்வேறு விதமான புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார்கள் எல்லாம் தற்போது இந்திய சாலைகளில் சோதனையில் இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் தற்போது பிஇ ரேல்-இ, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி, 2025 ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட், எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட்ட ,எக்ஸ்இவி 7இ மற்றும் புதிய பொலிரோ ஆகிய கார்களை அந்நிறுவனம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் திட்டப்படி ஒவ்வொரு கார்களாக விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் மஹிந்திரா நிறுவனம் ரகசியமாக புதிய விஷயம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் எதிர்காலத்தில் வாகனங்களை தயாரிக்க புதிய ஃபிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த பிளாட்ஃபார்மை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என தற்போது டீசர் வெளியாகியுள்ளது. இந்த பிளாட்ஃபார்மை மஹிந்திரா நிறுவனம் புதிய ஃப்யீச்சர்ஸ் ஆர்க்கிடெக்ஸர் என குறிப்பிடுகிறது. இந்த ஆர்க்கிடெக்ஸருக்கு மஹிந்திரா நிறுவனம் Freedom NU என பெயர் வைத்துள்ளது என அதன் டீசர் மூலம் தெரிகிறது.
இந்த டீசரை மஹிந்திரா நிறுவனத்தின் கம்பஷன் இன்ஜின் பிரிவில் பகிர்ந்துள்ளனர். ஆனால் டீசரில் எலெக்ட்ரிக் பிரிவின் லோகோவும் இடம் பெற்றள்ளது. இதன் மூலம் இந்த பிளாட்ஃபார்ம் கம்பஷன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இரண்டையுமே சேர்ந்து தயாரிக்க முடியும் வகையில் உருவாக்கப்படும் எனவ தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தான் தெரியவரும்.

இது போக இந்த டீசரை மேலும் கவனித்து பார்த்தால் இதில் 4 கலரில் நீளமான கோடுகள் இருப்பது தெரிகிறது. இது இந்த பிளாட்ஃபார்மில் 4 விதமான ஃப்யூயல் வாகனங்களையும் தயாரிக்க ஏற்றது என குறிப்பிடுவது போல உள்ளது, பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக், ஹைபிரிட் ஆகிய வாகனங்கள் இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.
மஹிந்திராவின் இந்த புதிய ஃபிளாட்ஃபார்மில் முதலில் பொலிரோ அல்லது தார் ஆகிய கார்கள் தான் தயாிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை 2026ம் ஆண்டு இறுதியில் தான் இதில் தயாரிப்பு துவங்கும் என்பதால் கால மாற்றத்திற்கு ஏற்ப மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் ஹைபிரிட் இன்ஜினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை மஹிந்திரா நிறுவனம் பிளக் இன் ஹைபிரிட் வாகனமாக உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் நீண்ட தூரம் ரேஞ்ச் கிடைக்கும் வகையில் இந்த வாகனங்கள் உருவாக்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் மற்றம் கம்பஷன் இன்ஜின் வாகனங்களுக்கு இடையிலான கேப்பை நிரப்பும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் மட்டுமல்ல பல்வேறு ஃப்யூயல் ஆப்ஷன்களில் வாகனங்கள் தேவை. இதை புரிந்து கொண்டு தான் மஹிந்திரா நிறுவனம் இந்த பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது. இதன் அறிமுகத்தின் போது தான் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications








