மாருதி, டாடா எல்லாம் ஒரம்போ! மஹிந்திராவின் இந்த பிளாட்ஃபார்மை பார்த்து ஊரே நடுங்குது!
மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தனது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும், அல்லது அறிமுகப்படுத்தும். இந்தாண்டு அந்நிறுவனம் தனது புதிய நியூ.ஐக்யூ என்ற கார் கட்டுமான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தயாரிக்கப்படம் 4 கார்களின் கான்செப்ட் கார்களையும் காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் இன்று தனது நியூ.ஐக்யூ என்ற பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தியுள்ளுது இது அதன் சி செக்மெண்ட் எஸ்யூவி கார்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த தளத்தில் தயாரிக்கப்படும் கார்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தளத்தில் 2 சொகுசு எஸ்யூவிகளும் களம் இறங்குகிறது.

இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் வாகனம் 4.3 மீட்டர் நீளமும், 227 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும். இதுபோக 176 மிமீ, மற்றும் 204 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வருகிறது. இந்த பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார்களில் ரூஃப் பகதியில் சுமார் 644 லிட்டர் அளவில் லக்கேஜ்களை ஏற்ற முடியும். ஆனால் இந்நிறுவனம் இதை 458 முதல் 560 லிட்டர் அளவில் தான் பரிந்துரை செய்யப்படும் என தெரிகிறது.
இந்த காரின் மெக்கானிக்கல் பாகங்களை பொருத்தவரை 5 லிங்க் பின்பக்க சஸ்பென்சன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மூத்தான ரைடு மற்றம் சிறப்பான பாடி கண்ட்ரோல் ஆகியவை கிடைக்கும். இந்த பிளாட்ஃபார்மில் காரின் எடை குறைவாக இருக்கும்படி வடிவமைக்க முடியும் டர்னிங் ரேடியஸ் 10.5 மீட்டராக இருக்கும்.

இந்த பிளாட்ஃபார்ம், குளோபல் என்கேப், ஏஎன்கேப், யூரோ என்கேப், ஆகிய பாதுகாப்பு சோதனையில் சிறப்பாக ஃபெர்பார்ம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த ஃபிளாட்பார்மில் கம்பஷன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் இன்ஜின் ஆகிய இரண்டும் பொருத்தும் வகையில் வடிவமைக்க முடியும்.
இந்த ஃபிளாட்ஃபார்மில் தான் மஹி்நதிரா நிறுவனம் தனது புதிய தலைமுறை பொலிரோ காரை தயாரித்துள்ளதாக தெரிகிறது. இந்த கார் தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்படுகிறது.விரைவில் இந்தகார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை தரும்.

இந்த பிளாட்ஃபார்மில் எதிர்காலத்தில் பல கார்கள் தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம் 2027ம் ஆண்டை குறி வைத்து தான் இந்த பிளாட்ஃபார்மை தயாரித்துள்ளது. இதனால் இந்த பிளாட்ஃபார்மில் தயாிரக்கப்படும் கார்கள் 2026ம் ஆண்டு இறுதியில் தான் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. பொலிரோ புதிய தலைமுறை கார் விற்பனைக்கு வந்த பிறகு அதில் மாற்றம் ஏற்படவும் வாய்புள்ளது.2026ம் ஆண்டிலேயே கார்களை தயாரிக்க வழியை ஏற்படுத்தகூட வழி வகுக்கும். இந்த கார்கள் மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் எதிர்காலத்தை கணக்கிட்டு தற்போதே ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த ஃபிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது. இது நிச்சயம் மக்களுக்கு பிடித்த காரை உருவாக்கி தரும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications









