குட்டி யானை, டாடா ஏஸ் எல்லாம் காணாம போக போகுது! மஹிந்திரா உருவாக்கும் இந்த வாகனத்தை பற்றி தான் பேச்சு

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியதில்லை. மஹிந்திராவில் இருந்து ஸ்கார்பியோ (Scorpio) கார்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனாலேயே ஸ்கார்பியோ-என் காரில் புதியதாக பிக்-அப் டிரக் (Pick-up Truck) வெர்சனை கொண்டுவர மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகி உள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் ஏற்கனவே இதற்கு முன்னர் கடந்த 2024ஆம் ஆண்டில் இதேபோன்று வெளியில் காட்சி தந்திருந்தது. அப்போதும் வாகனம் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருந்தது, தற்போதைய சோதனை ஓட்டத்திலும் வாகனம் மறைக்கப்பட்டதாகவே உள்ளது. இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள படங்களில் வாகனத்தின் தோற்றத்தை ஓரளவிற்கு மறைப்புகளை தாண்டி அறிய முடிகிறது.

mahindra s new pick-up truck spotted

பிக்-அப் டிரக் வாகனங்களுக்கு இந்தியாவில் பெரியதாக மார்க்கெட் கிடையாது. அமெரிக்க நாடுகளில் தான் இவ்வாறான வாகனங்களை வாங்க அதிக கஸ்டமர்கள் உள்ளன. அந்த நாடுகளில் காருடன், சரக்கு வாகனம் இணைக்கப்பட்டது போன்றதான தோற்றத்தில் பிக்-அப் டிரக் வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதாவது, டிரைவர் கேபினுக்குள் 4 பேர் அமர்ந்துச் செல்லும் வகையில் இருக்கை வசதிகள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு, அதிக இடவசதி உடன் பிக்-அப் டிரக் வாகனங்களை உருவாக்கினால் அதிக விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே, வெறும் 2 இருக்கைகள் உடன் ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனத்தை மஹிந்திரா வடிவமைத்துள்ளது. இருப்பினும், பின்பக்கத்தில் சுமை ஏற்றும் பகுதி பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இத்தகைய வாகனத்தை தனி நபர் பயன்பாட்டிற்கு அனுமதிப்பார்களா என்பது கேள்வியாக உள்ளது.

mahindra s new pick-up truck spotted

ஏனெனில் இந்தியாவில் இவ்வாறான வாகனங்களை கமர்ஷியல் பயன்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது. இந்த பிக்-அப் டிரக் வாகனத்தை முன்பக்கம் பெரிதும் விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ-என் காரை ஒத்துக் காணப்படுகிறது. குறிப்பாக, செங்குத்தான 6-ஸ்லாட்கள் உடன் கிரில், எல்இடி ஹெட்லைட்கள், C-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்டவை ஸ்கார்பியோ-என் காரில் இருந்து பெறப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பொனெட்டின் வடிவம் மற்றும் அலாய் சக்கரங்களின் டிசைனும் கூட ஸ்கார்பியோ-என் காரை ஒத்துக் காணப்படுகின்றன. இந்த பிக்-அப் டிரக் வாகனம் அடுத்த 2026ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என ஒரு தகவல் உலாவி கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த வாகனம் முதலாவதாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தான் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

mahindra s new pick-up truck spotted

புதிய பாடி-ஆன்-ஃப்ரேமில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படும் இந்த பிக்-அப் டிரக்கில் அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட 2ஆம் தலைமுறை எம்ஹாவ்க் 4-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்படலாம். இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை மஹிந்திரா வழங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் அதன் புதிய பிக்-அப் டிரக் வாகனத்திற்கான கான்செப்ட்டை பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தியது. அதற்கும், தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனத்திற்கும் இடையே தோற்றத்தில் நிறைய வேறுப்பாடுகள் உள்ளன. இதில் இருந்து இந்தியாவிற்கென பிரத்யேகமாக ஒரு பிக்-அப் டிரக் வாகனத்தை மஹிந்திரா உருவாக்குகிறது என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2025, 8:00 [IST]
English summary
Mahindra pick up truck spotted looks like scorpio n car
மேலும்... #mahindra #scorpio #pick up truck #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X