சீன நிறுவனங்களை ஒழிச்சு கட்ட ரெடியாகும் மஹிந்திரா! ஐரோப்பால இந்திய கொடி பறக்க போகுது!
மஹிந்திரா நிறுவனத்தின் 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்கள் (Electric SUVs) தற்போது இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) ஆகியவை ஆகும்.
இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே மஹிந்திரா பிஇ 6 மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களையும், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய சந்தைகளில், தற்போதைய நிலையில் சீன கார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சீனாவை சேர்ந்த பிஒய்டி (BYD), லீப்மோட்டார் (Leapmotor) மற்றும் ஹாவல் (Haval) உள்ளிட்ட நிறுவனங்கள்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மஹிந்திரா பிஇ 6 மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களையும் இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மஹிந்திரா நிறுவனத்தின் முடிவு, சீன நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்துவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே சமீபத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (India-UK Free Trade Agreement) கையெழுத்தானது. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு சாதகமான ஒரு அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் NU_IQ பிளாட்பார்மை இந்தியாவில் காட்சிப்படுத்தியது.
ஈரோ என்சிஏபி (Euro NCAP) மற்றும் ஆஸ்திரேலியன் என்சிஏபி (Australian NCAP) விதிமுறைகளுக்கு இணக்கமான வகையில் இந்த பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் கார்கள், ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், பிஇ 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்மேன் எடிசனை, அந்நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் சமீபத்தில் அதற்கு முன்பதிவுகளும் தொடங்கின. ஆனால் முன்பதிவுகள் தொடங்கப்பட்ட வெறும் 135 வினாடிகளிலேயே, அனைத்து மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 999 பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களை உற்பத்தி செய்யவுள்ளது. இவை அனைத்தும் வெறும் 135 வினாடிகளிலேயே விற்று தீர்ந்துள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசனின் டெலிவரி பணிகள், வரும் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கப்படவுள்ளன.
அன்றைய நாள் சர்வதேச பேட்மேன் தினம் (International Batman Day) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வரும் காலங்களில் மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற கார்களிலும் இதே போன்ற லிமிடெட் எடிசன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களும், இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், இந்தியாவை போலவே அங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களிலும், இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்ற வகையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








