காரை விட டிராக்டர் தான் அதிகமா வித்திருக்குது! இந்த கம்பெனி பெயரை கேட்டாலே சும்மா அதிருதே!
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 47 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 18 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள விற்பனை விபரங்களை காணலாம்.
மஹிந்திரா நிறவனம் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளன. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதமும் இந்திய மார்கெட்டில் தனக்கென ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்திய மார்கெட்டில் எஸ்யூவி கார்கள் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் ஏற்றுமதியும சிறப்பாக இருந்துள்ளது.

மஹிந்திராவின் பயணிகள் வாகன செக்மெண்டில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, பொலிரோ, ஸ்கார்பியோ என், தார் ஆகிய கார்கள் கடந்த மாசம் சிறப்பாக விற்பனையாகியள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 47,306 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் மொத்தம் 40,022 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு 18 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.
கடந்த முதல் காலாண்டில் மொத்தம் 1,52,067 வாகனங்களை விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டு விற்பனையை விட 22 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. சமீப காலமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் தான் மஹிந்திரா நிறுவனம் பிஇ.6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் இலகுரக கமர்ஷியல் வாகனங்கள் அதாவது 2 டன்னுக்கு குறைவான ரக வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதே நேரம் 3.5 டன் வரை சுமந்து செல்லும் இலகுரக வாகனங்களின் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 3.5 டன் எடைக்கு மேல் சுமந்து செல்லும் வாகனங்களின் விற்பனை 1 சதவீதம் அதிகரித்துள்ளது. 3வீலர் செக்மெண்ட் 37 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 2634 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான வாகனங்களை விட 1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 2634 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 9667 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

மஹிந்திரா விவசாய பயன்பாட்டு வாகன விற்பனையிலும் பின்தங்கவில்லை. கடந்த மாதம் மட்டும் மொத்தம் 51,769 டிராக்டர்களை விற்பனை செய்து வருகிறது. இது கடந்தாண்டு இதே காலகட்ட விற்பனையை ஒப்பிடும் போது 13 சதவீதம் அதிகம் ஆகும். மொத்தம் 1623 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் பயணிகள் வாகன செக்மெண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிராக்டர் விற்பனை கார்கள் விற்பனையை விட அதிகமாக இருக்கிறது. இது சற்று ஆச்சரியமான விஷயம் தான். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









