30 நாளில் 84 ஆயிரம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! எப்படி இவ்வளவு வித்துச்சு?

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விற்பனையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த மே மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்நிறுவனம் எவ்வளவு வாகனங்களை கடந்த மே மாதம் விற்பனை செய்துள்ளது. இது எவ்வளவு வளர்ச்சியை அந்நிறுவனத்திற்கு பெற்று தந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும் மிக முக்கிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தரமான தயாரிப்பை வழங்கும் நிறுவனம் என பெயர் பெற்றதால் இந்நிறுவனத்தின் விற்பனை சமீப நாட்களாக விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து விற்பனையில் வளர்ச்சியை அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.

Mahindra Sales May 2025

இந்நிலையில் கடந்த மே மாத விற்பனை விபரம் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் விற்பனையில் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 84110 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த மாத விற்பனையை விட 17 சதவீதம் அதிகம் ஆகும். இது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி விற்பனை விபரங்கள் ஆகும்.

இதில் எஸ்யூவி செக்மெண்ட் மட்டும் மொத்தம் 52431 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024 மே மாத விற்பனையை ஒப்பிடும் போது 21 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகம் ஆகும். ஏற்றுமதியை சேர்த்து கணக்கிடும் போது 54819 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்நிறுவனத்தின் யூட்டிலிட்டி வாகன விற்பனையும் அதிகமாகியுள்ளது.

Mahindra Sales May 2025

மஹிந்திரா நிறுவனம் யூட்டிலிட்டி வாகன விற்பனையில் இந்தாண்டு 24 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றுமதி மட்டும் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் கமர்ஷியல் வாகன பிரிவு பெரிய வளர்ச்சியும் இல்லாமல் வீழ்ச்சியும் இல்லாமல் இருக்கிறது. இந்நிறுவனத்தின் லைட் கமர்ஷியல் வாகனத்தை பொருத்தவரை 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

அதே போல 3வீலர் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்கள் விற்பனையும் 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் மொத்தம் 6635 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. ஏற்றுமதியும் 37 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. மொத்தம் 3652 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

Mahindra Sales May 2025

மஹிந்திராவின் கம்பஷன் இன்ஜின் போர்ர்ட்போலியோவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, பொலிரோ, பொலிரோ நியோ, தார், தார் ராக்ஸ், எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ கிளாசிக, ஸ்கார்பியோ என் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. அதே போல மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார்கள் லைன் அப்பில் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய வாகனங்கள் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹந்திரா நிறுவனம் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் 84 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒரே மாதத்தில் இந்த காரை வாங்கியுள்ளது நிச்சயம் மகிழ்ச்சிகரமான செய்தி தான். விரைவில் இந்நிறுவனம் இந்தியாவில் முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, June 1, 2025, 21:41 [IST]
English summary
Mahindra sales may 2025 sales goes to 84k units in 31 days
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X