9 பேர் போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா! டாடாவை ஒழிக்கறதுக்குனே அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருக்கு!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் ஒரு சில கார்கள் விற்பனைக்கு வருவதும் தெரியாது. விற்பனையில் இருந்து விலக்கப்படுவதும் தெரியாது. வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால், அவை பிரபலம் அடைவதில்லை. ஆனால் ஒரு சில கார்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்து வருகின்றன.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் காரணத்தால், அவை பல தசாப்தங்களாக விற்பனையில் இருந்து வருகின்றன. இதற்கு மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) ஒரு உதாரணம். மஹிந்திரா ஸ்கார்பியோ கார், இந்திய சந்தையில் கடந்த 2002ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் ஆரம்ப விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்தது.

Mahindra Scorpio Classic Side View

குறைவான விலை, சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் கம்பீரமான டிசைன் போன்ற காரணங்களால், உடனடியாக இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ ஈர்த்தது. எனவேதான் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 23 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட, தற்போதும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை (Sales Report) காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக 18,107 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது.

Mahindra Scorpio N

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 15,877 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 2,230 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 14 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars October 2025), மஹிந்திரா ஸ்கார்பியோ கார், 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்கள் உள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ காரானது, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என்று மொத்தம் 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது, 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.98 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 16.70 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, 7 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.20 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.17 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய டாடா சியரா (Tata Sierra) போன்ற கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா ஸ்கார்பியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2025, 17:37 [IST]
English summary
Mahindra scorpio classic n sales report october 2025 14 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+