எவ்வளவு கூட்டத்திலும் இந்த காரில் தனியாக தெரிவீர்கள்! ஷோரூமுக்கு வர ஸ்டார்ட் ஆயிடுச்சி
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரின் புதிய 'கருப்பு பதிப்பு' (Black Edition) விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த கார் தொடர்பான டீசர் படங்களை சமீபத்தில்தான் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த நிலையில், டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் புதிய ஸ்கார்பியோ-என் பிளாக் எடிசன் கார் காட்சி தந்துள்ளது. மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூமுக்குள் காட்சி தந்துள்ள இந்த புதிய ஸ்கார்பியோ-என் கார் தொடர்பான வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக ஸ்கார்பியோ-என் விளங்குகிறது. நீண்ட வருடங்களாக இந்திய கார்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள சில கார்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ ஒன்றாகும்.

ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறை காராக ஸ்கார்பியோ-என் மாடலை சில வருடங்களுக்கு முன் மஹிந்திரா அறிமுகம் செய்தது. வழக்கமான ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவில் இருந்து சற்று மாறுப்பட்டதாக செவ்வகம் வடிவில் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. புதுமையான தோற்றத்தை கொண்டிருந்ததால் ஸ்கார்பியோ-என் காரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.
இதனாலேயே ஸ்கார்பியோ-என் காரில் அவ்வப்போது மஹிந்திரா நிறுவனம் ஏதேனும் அப்டேட்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் விரைவில் ஸ்கார்பியோ-என் பிளாக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில்தான், ஸ்கார்பியோ-என் பிளாக் எடிசன் கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமின் வளாகத்திற்குள் காட்சி தந்துள்ளது.

பெயருக்கேற்ப இந்த பிளாக் எடிசன் கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. கார் முழுக்க கருப்பு நிறத்தில் இருக்க, பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் கூட கருப்பு நிறத்தில் உள்ளன. அதேநேரம், காரில் தனித்து தெரியும் வகையில் காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் சில க்ரோம் எலிமெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
காரின் வெளிப்பக்கத்தை போலவே, உட்புறமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த பிளாக் எடிசன் காரை ஸ்கார்பியோ-என் காரின் டாப் வேரியண்ட்டான இசட்8 எல் -இன் அடிப்படையில் மஹிந்திரா உருவாக்கி உள்ளது. அதாவது, ஸ்கார்பியோ-என் காரின் இசட்8 எல் வேரியண்ட்டில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் புதிய பிளாக் எடிசனிலும் கிடைக்கும்.

காருக்குள் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் உள்ளது. லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் 7-இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 2-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப்-ஐ பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக இவ்வாறான ஸ்பெஷல் எடிசன்கள் கொண்டுவரப்படுகின்றன. இருப்பினும், என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. புதிய ஸ்கார்பியோ-என் பிளாக் எடிசனின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இன்னும் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









