ஒரு திருவிழா கூட்டத்தையே மொத்தமா ஏத்தீட்டு போலாம்! மார்க்கெட்ல இந்த காருக்கு பயங்கர டிமாண்ட் ஆயிட்டு இருக்கு!
இந்தியாவில் யாருக்கும் அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவை மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) ஆகியவை ஆகும். இந்த சூழலில், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதிக்கான (ஜனவரி-ஜூன்) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்தமாக 85,648 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியில் 85,326 ஆக இருந்தது. அதாவது விற்பனையில் பெரிய அளவில் வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ மஹிந்திரா ஸ்கார்பியோ சந்திக்கவில்லை.
கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியை போலவே, கிட்டத்தட்ட நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியிலும், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை இருந்துள்ளது. நாங்கள் இங்கே கூறியுள்ளவை மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை (மஹிந்திரா ஸ்கார்பியோ என் + மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.62 லட்ச ரூபாயாக இருக்கிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார், 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைத்து கொண்டுள்ளது.
மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.77 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.72 லட்ச ரூபாயாக உள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது.
இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கடந்த 2002ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்த கார் விற்பனையில் உள்ளது.
இருப்பினும் தொடர்ச்சியான அப்டேட்கள் உள்ளிட்ட காரணங்களால், மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை தற்போதும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் எம்ஜி ஹெக்டர் (MG Hector) போன்ற கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா ஸ்கார்பியோ கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஒரு முரட்டுத்தனமான மற்றும் கம்பீரமான எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என்று நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், அட்டகாசமான வசதிகள் மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான இருக்கை அமைப்பு போன்றவை எல்லாம் இந்த காரின் பலம் ஆகும்.


Click it and Unblock the Notifications








