9 பேரை ஒரே காரில் ஒன்னா ஏத்தீட்டு போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா! உலகையே மிரள வைத்த இந்திய தயாரிப்பு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இதன் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 23 ஆண்டுகள் கடந்து விட்டன.
இருப்பினும் தற்போதும் கூட, ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா ஸ்கார்பியோ பதிவு செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 15,616 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 12,704 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 2,912 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் 23 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒட்டுமொத்தமாக 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) ஆகியவை ஆகும். நாங்கள் இங்கே கூறியுள்ள விற்பனை எண்ணிக்கை அனைத்தும் இந்த 2 வெர்ஷன்களையும் உள்ளடக்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.20 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 23.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த வெர்ஷன் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த வெர்ஷன் 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முன்னதாக இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்து விலைகளும், மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா ஸ்கார்பியோ கருதப்படுகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ கார், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது இந்தியாவிற்கு பெருமை அளிக்க கூடிய ஒரு விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








