மஹிந்திரா ரகசியமா வச்சிருக்கிறாங்க! இந்த காரை வேற லெவல்ல மாத்திட்டு இருக்காங்க!

மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டு வருகிறது.இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்படும் ஸ்கார்பியோ என் காரை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதன் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை வரும் 2026ம் ஆண்டு இரண்டாம் பாதியில் இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஹஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட் செய்யப்படவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் பல முக்கிய மாற்றங்கள், அப்டேட்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜினில் மாற்றங்கள் இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Scorpio N facelift

இதில் முக்கியமாக வெளிப்புறத்தில் புதிய கிரில் வடிவமைப்பு, புதிய எல்இடி டிஆர்எல், அப்டேட் செய்யப்பட்ட முன்பக்க பின்பக்க பம்பர்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இது போக உட்பகுதியில் பானரோமிக் சன் ரூஃப், முழு டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர்டு சீட் டிரைவர் மெமரி ஃபங்சன், வென்டிலேட் செய்யப்பட்ட முன்-பின் சீட்டுகள், புதிய ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், டால்பி அட்மாஸ், ஆட்டோ பார்க்கிங் அம்சங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லாமல் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டர்போ டீசல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra Scorpio N facelift

இன்ஜினில் மாற்றம் இல்லை என்றாலும் அதன் பெர்ஃபார்மென்ஸ், பவர் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் புதிய அப்டேட்டில் கார் வாங்குபவர்களுக்கு புதிய டிரைவிங் அனுபவம் கிடைக்கும் என்பதால் இந்த அப்டேட் இடம் பெற அதிகமான வாய்ப்புள்ளது.

ஃபேஸ்லிஃப்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் வரப்போகும் மாற்றங்கள் முக்கிய மாற்றங்களாக இருக்கும். கார் வாங்குபவர்களுக்கு அதிகம் தேவைப்படும் மாற்றங்களாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.

Mahindra Scorpio N facelift

இதஎல்லாம் தற்போதைய நிலையில் உள்ள மாற்றங்கள் தான். வருங்காலங்களில் இந்த மாற்றங்களிலேயே மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 2026ம் ஆண்டு வாகன விற்பனை டிரெண்டை பொருத்து இதன் அம்சங்களில் சில அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் அப்டேட் செய்யப்பட்டால் அதன் விற்பனை பல மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது.இதஎல்லாம் தற்போதைய நிலையில் உள்ள மாற்றங்கள் தான். வருங்காலங்களில் இந்த மாற்றங்களிலேயே மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 2026ம் ஆண்டு வாகன விற்பனை டிரெண்டை பொருத்து இதன் அம்சங்களில் சில அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் அப்டேட் செய்யப்பட்டால் அதன் விற்பனை பல மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 19:45 [IST]
English summary
Mahindra scorpio n facelift in works top 3 changes to expect
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X