30 நிமிஷத்துல 1 லட்சம் புக்கிங்! 7 பேர் போற புதிய காரை வாங்க மக்கள் ஷோரூம் வாசல்ல வரிசைல நிக்க போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N). இது மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள 7 சீட்டர் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்துடன் இது முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்த கார் ஆகும்.

அதாவது மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி தொடங்கியது. அப்போது வெறும் 1 நிமிடத்திலேயே 25 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை மஹிந்திரா ஸ்கார்பியோ என் குவித்து விட்டது. அதை தொடர்ந்து 30 நிமிடங்களில், இந்த காருக்கு, 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்து விட்டன.

Mahindra Scorpio N Top View

அப்படிப்பட்ட கார், விற்பனைக்கு வந்து சில ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே ஸ்கார்பியோ என் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனையோட்டம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கியுள்ளது.

இது குறித்து கார்பிளாக்இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options), ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும்.

Mahindra Scorpio N

அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். அத்துடன் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும். இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்பட்டிருக்கும்.

அதேபோல் வசதிகளை (Features) பொறுத்தவரையில், தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்பட்டு வருவதை விட அளவில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் வழங்கப்படும் என நாம் எதிர்பார்க்க முடியும்.

டிசைனை பொறுத்தவரையில், முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரீ-டிசைன் செய்யப்பட்ட புதிய அலாய் வீல்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.20 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.17 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். இருப்பினும் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 22, 2025, 23:58 [IST]
English summary
Mahindra scorpio n facelift testing commenced in india check all details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+