மஹிந்திரா ஸ்கார்பியோவை இப்படி பார்த்து இருக்கவே மாட்டீர்கள்! அறிமுகம் எப்போதுனு சொல்லுங்கப்பா...!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களுள் ஒன்று ஸ்கார்பியோ-என் (Scorpio-N) ஆகும். ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 10 ஆயிரம் ஸ்கார்பியோ-என் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலேயே புது, புது ஸ்கார்பியோ கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய மஹிந்திரா முயற்சிக்கிறது.
அந்த வகையில் அடுத்ததாக ஸ்கார்பியோ-என் காரின் புதிய பிக்-அப் டிரக் (Pick-up Truck) வெர்சனை அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வெர்சனின் கான்செப்ட் (Concept) வாகனம் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் கடந்த 2023ஆம் ஆண்டில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, ஸ்கார்பியோ-என் காரின் பிக்-அப் டிரக் வெர்சனில் பணியாற்ற ஆரம்பித்த மஹிந்திரா நிறுவனம் அதனை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டது என்பதை வெளிக்காட்டும் விதமாக ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் ஒன்று தற்போது இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவில், ஸ்கார்பியோ-என் காரில் க்ரில், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவை புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால், காரை சுற்றிலும் உள்ள விளக்குகள் அனைத்தும் தற்காலிகமானவைகளாக பொருத்தப்பட்டு உள்ளன. அதாவது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனத்தில் இந்த விளக்குகளை எதிர்பார்க்க முடியாது.

ஸ்கார்பியோ பிக்-அப் டிரக் வாகனம் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டங்களின் மூலம், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் சிங்கிள்-கேப் மற்றும் டபுள்-கேப் என இரு விதமான உடலமைப்புகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை அறிய முடிந்தது.
வெவ்வேறான கேப் ஆப்ஷன்களில் வெவ்வேறான டிசைனில் வாகனத்தின் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், வாகனம் கவிழ நேர்ந்தால், வாகனத்தின் மேற்கூரை நசுங்குவதை தடுக்கும் விதமான ரோல் பார்களும் சிங்கிள்-கேப் மற்றும் டபுள்-கேப் என இரு விதமான கேப் ஆப்ஷன்களிலும் வழங்கப்பட உள்ளன.

மற்றப்படி, புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனத்தின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் எதுவும் இதுவரையில் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் இந்தியாவிற்கு மட்டுமில்லாமல், உலகளாவிய சந்தைக்கு ஏற்றதாக உருவாக்கப்படுகிறது என்பதை உறுதியாக சொல்லலாம். இதனால், சில வெளிநாட்டு சந்தைகளிலும் ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனம் அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் வாகனங்களுள் இந்த ஸ்கார்பியோ-என் பிக்-அப் டிரக் வாகனமும் ஒன்றாகும். தற்போது சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் காலம் வெகு தொலைவில் என்பதை உணர முடிகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த வாகனம் வெளிநாட்டு சந்தைகளையும் டார்க் செய்து கொண்டுவரப்படுகிறது.
Source: Auto Hindustan (https://auto.hindustantimes.com/)


Click it and Unblock the Notifications









