17 லட்ச ரூபாய் காரில் இந்த சக்கரங்களையா வழங்குவீர்கள்? மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ பார்க்க எப்படி இருக்கு?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, ஸ்கார்பியோ-என் (Scorpio-N) ஆகும். 22 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் வரிசையில் லேட்டஸ்ட் காராக 2022ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவிலான தோற்றத்திற்கு பதிலாக புதுமையான செவ்வகம் வடிவிலான தோற்றத்தில் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. இது இன்றைய கால தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது ஸ்கார்பியோ-என் கார்களின் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிய வருகிறது.

இருப்பினும், மேலும் கஸ்டமர்களை பெறும் முயற்சியாக அவ்வப்போது ஸ்கார்பியோ-என் காரில் தொடர்ச்சியாக அப்டேட்களை கொண்டுவரும் மஹிந்திரா நிறுவனம், அந்த வகையில் சமீபத்தில் ஸ்கார்பியோ-என் காரின் விலைமிக்க இசட்4 (Z4) வேரியண்ட்டில் புதியதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) ஆப்ஷனை வழங்கியது.

mahindra scorpio-n diesel automatic car

இதன் மூலமாக, ஸ்கார்பியோ-என் காரை குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்குவதற்கு மஹிந்திரா வழிவகை செய்துள்ளது. இந்த நிலையில், புதிய ஸ்கார்பியோ-என் இசட்4 ஆட்டோமேட்டிக் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் காட்சித்தருவது, டீசல் என்ஜினை கொண்ட புதிய ஸ்கார்பியோ-என் இசட்4 ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.86 லட்சமாக உள்ளது. டீசல் என்ஜின் உடன் மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட ஸ்கார்பியோ-என் காரின் இசட்4 வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் உடனும் வாங்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட டீசல் என்ஜின் உடனான ஸ்கார்பியோ-என் இசட்4 ஆட்டோமேட்டிக் காரின் விலையை காட்டிலும் பெட்ரோல் என்ஜின் உடன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.44,000 குறைவாகும். அதேபோல், ஸ்கார்பியோ-என் இசட்4 டீசல் காரின் விலை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனுடன் ஒப்பிடுகையில், மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.1.65 லட்சம் அளவிற்கு குறைவாகும்.

தற்போது ஷோரூம் வளாகத்தில் இருந்து வெளியாகி உள்ள வீடியோவில் ஸ்கார்பியோ-என் இசட்4 டீசல் ஆட்டோமேட்டிக் காரின் தோற்றத்தை பொறுத்தவரையில், காரின் முன்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லைட்கள், பிரஷ் செய்யப்பட்ட சில்வர் நிறத்திலான 6-ஸ்லாட்கள் உடன் கிரில் மற்றும் தேன்கூடு டிசைனிலான ஏர்டேமிற்கு இரு பக்கங்களிலும் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அப்படியே காரின் பக்கவாட்டிற்கு சென்றால், அலாய் சக்கரங்களுக்கு பதிலாக 17-இன்ச்சில் சாதாரணமான இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் காரின் உடல் நிறத்தில் டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் உள்ளன. இவற்றுடன், இசட்4 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் மேற்கூரையில் கருப்பு நிறத்தில் ரூஃப் ரெயில்கள் மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ ஆனது மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருப்பினும், இந்த காரில் அவ்வப்போது தொடர்ச்சியாக அப்டேட்களை கொண்டுவந்து மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து ஸ்கார்பியோவின் ஆயுட்காலத்தை மார்க்கெட்டில் அதிகப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஸ்கார்பியோ-என் காரை வாங்க நினைப்பவர்கள் வீடியோவில் காட்சியளிக்கும் காரை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 28, 2025, 23:32 [IST]
English summary
Mahindra scorpio n z4 diesel automatic car spotted in dealership showroom yard
மேலும்... #mahindra #scorpio #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+