இந்திய ராணுவத்திற்கு ரொம்ப பிடிச்ச கார்... மக்கள் போட்டி போட்டு வாங்கீட்டு இருக்காங்க...

இந்திய எஸ்யூவி கார் (SUV Car) சந்தையில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்திருக்கும் கார் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). கடந்த 2002ம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருந்து வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை இந்திய காவல் துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் கூட அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிஜ உலக ஹீரோக்களுக்கு மட்டுமல்லாது, திரையுலக வில்லன்களுக்கும் கூட பிடித்த காராக மஹிந்திரா ஸ்கார்பியோ திகழ்கிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் கட்டுமஸ்தான தோற்றம்தான் இதற்கு மிக முக்கியமான காரணம்.

விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டாலும் கூட, நேற்றுதான் லான்ச் செய்யப்பட்டது போல், மஹிந்திரா ஸ்கார்பியோ காரை இந்திய வாடிக்கையாளர்கள் இன்னமும் போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதை உறுதி செய்கிறது.

Mahindra Scorpio Side View

இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒட்டுமொத்தமாக 15,534 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ 5வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் நூலிழையில்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் 4வது இடத்தை இழந்துள்ளது. இந்த டாப் 10 கார்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகும். இதன் விற்பனை எண்ணிக்கை 15,780 ஆக மட்டுமே உள்ளது. அதாவது வெறும் 246 யூனிட்கள் வித்தியாசத்தில்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ 4வது இடத்தை இழந்துள்ளது.

Mahindra Scorpio

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் தற்போதைய நிலையில் மொத்தம் 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) ஆகியவை ஆகும். இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்தான் விலை உயர்ந்தது.

இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 25.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.62 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.72 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், முரட்டுத்தனமான தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரின் இன்டீரியரில் தாராளமான இடவசதி கிடைக்கிறது.

அத்துடன் ஆஃப்-ரோடு திறன்களிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ தலை சிறந்து விளங்குகிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா ஸ்கார்பியோவை மாற்றியுள்ளன. இதன் காரணமாகவே லான்ச் செய்யப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாக மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2025, 23:32 [IST]
English summary
Mahindra scorpio sales report april 2025 15534 units sold
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+