9 பேர் போற முரட்டுத்தனமான காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! தீபாவளிக்கு எத்தன பேர் வாங்க போறாங்களோ!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக (மஹிந்திரா ஸ்கார்பியோ என் + மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்) 9,840 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 13,787 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3,947 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 29 சதவீத வீழ்ச்சி ஆகும்.
இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் (Top 10 SUVs August 2025), மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு 6வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் மஹிந்திரா ஸ்கார்பியோ 6வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.70 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.
மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.17 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது, 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இது சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் லெவல் 2 அடாஸ் மற்றும் சன்ரூஃப் போன்ற ஏராளமான அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து மஹிந்திரா ஸ்கார்பியோவை இன்றளவும் (கடந்த 2002ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது) மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.
மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்றை பெற்றுள்ள ஒரு கார் ஆகும். அத்துடன் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் வேறு தொடங்கியுள்ளது. எனவே மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கூடிய விரைவில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








