ஒரே காரில் 9 பேர் ஒன்னா போலாம்! விலை இவ்ளோதானா! மொத்த கூட்டமும் மஹிந்திரா ஷோரூம்லதான் இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகி விட்டது.
இருப்பினும் தற்போதும் கூட ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா ஸ்கார்பியோ பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக 13,747 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 12,237 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 1,510 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் 12 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில் (Top 10 SUVs July 2025), மஹிந்திரா ஸ்கார்பியோ கார், 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகியவை உள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி, தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) ஒன்றாகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.77 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ கார் 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் மற்றொரு வெர்ஷன் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) ஆகும்.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 25.62 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் போல் அல்லாமல், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரானது, 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom price) என்பது கவனிக்கத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில், ஸ்கார்பியோ கார் மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில், ஒரு கம்பீரமான எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








