இந்த 3 காரை தான் பாதி பேரு வாங்குறாங்க! அப்படி என்னதாங்க இருக்குது இதுல?
மஹிந்திரா நிறுவனம் தனது ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் 2 கார்கள் தான் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 62 சதவீத விற்பனவையை பெற்றுள்ளது. இந்த இரண்டு கார்கள் பெரிய அளவில் ஹிட்டாக என்ன காரணம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 47,306 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் 18.2 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்தம் 40,022 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது நல்ல வளர்ச்சிபெற்றுள்ள நிலையில் இதில் முக்கியமான விஷயம் தெரியவந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வரும் ஸ்கார்பியோ, பொலிரோ மற்றும் தார் ஆகி கார்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளன. ஸ்கார்பியோ காரை பொருத்தவரை மொத்தம் 12,740 கார்கள் விற்பனையாகியுள்ளன. தார் காரை பொருத்தவரை 9542 கார்களும், பொலிரோ காரை பொருத்தவரை 7478 கார்களும் விற்பனையாகியுள்ளன. இந்த 3 கார்களும் மொத்தம் சேர்த்து 29,760 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 62 சதவீதம் ஆகும்.
கடந்த மாதம் மாருதி நிறுவனத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் அதிகம் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இரக்கிறது. கடந்த மாதம் இந்த நிறுவனத்தின் மார்கெட் பங்கு 14.9 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மொத்தம் 11.8 சதவீதம் தான் இருந்தது. தற்போது 3.1 சதவீதம் அளவிற்கு மார்கெட் பங்கு அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்நிறுவனம் 9.8 சதவீதம் விற்பனை சரீவை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் 52431 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் ஜூன் மாதம் வெறும் 47,306 கார்கள் விற்பனையாகியிருந்தது.குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்த நிறுவனத்தின் விற்பனையில் 3 கார்கள் பாதிக்கும் அதிகமான விற்பனையை பெற்றுள்ளது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது நமக்கு தெரிகிறது. இந்த கார்களுக்கு நல்ல புக்கிங் குவிந்ததும் இந்த காரின் விற்பனையை அதிகமாக இருப்பதற்கு முக்கிமான காரணம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை அதிக அளவு விற்பனை செய்து போட்டி போட்டு வருகிறது.மஹிந்திரா நிறுவனம் மற்ற மாடல்களின் விற்பனையை கவனத்தில் கொண்டு அதன் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட வேண்டும். திட்டமிட்டால் நிச்சயம் மாதம் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை என்ற இலக்கை நிச்சயம் எட்ட முடியும்.


Click it and Unblock the Notifications









