மஹிந்திரா பார்த்து, பார்த்து உருவாக்கிய வாகனம்... பெட்ரோல், டீசல் கார்களை எல்லாம் ஓரங்கட்ட வேண்டியது தான்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் மும்பையில் அதன் ஃப்ரீடம் என்யு (Freedom NU) கண்காட்சியில் விஷன் டி, விஷன் எக்ஸ், விஷன் எஸ் மற்றும் விஷன் எஸ்.எக்ஸ்.டி என நான்கு கான்செப்ட் (Concept) வாகனங்களை பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சுதந்திர தின ஃப்ரீடம் என்யு கண்காட்சியில் கான்செப்ட் வாகனங்களுடன் தனது எதிர்கால கார்களை உருவாக்குவதற்கான புதிய என்யு_ஐ.க்யூ (nu_IQ) என்கிற பிளாட்ஃபாரத்தையும் பார்வையாளர்கள் முன் மஹிந்திரா காட்சிப்படுத்தி உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி, பெட்ரோல்/ டீசல் வாகனங்களையும் புதிய என்யு_ஐ.க்யூ பிளாட்ஃபாரத்தில் உருவாக்க முடியும். ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினத்தின் போது புதியதாக ஏதாவது ஒரு வாகனத்தை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் மஹிந்திரா நிறுவனம் இந்த முறை தனது எதிர்கால திட்டங்களை ஃப்ரீடம் என்யு கண்காட்சியின் மூலம் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளது.

mahindra freedom nu event

இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள கான்செப்ட் வாகனங்களுள் முக்கியமாக விஷன் எஸ்.எக்ஸ்.டி (Vision SXT) வாகனத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், இந்த கான்செப்டின் மூலம் உருவாக்கப்படும் வாகனம் ஆனது விற்பனையில் உள்ள தார் வாகனத்தை போன்று இருக்கும். இன்னும் சொல்லப்போனால், தார் வாகனத்தில் விரைவாக அறிமுகம் செய்யப்பட உள்ள தார்.இ எலக்ட்ரிக் வாகனம் ஆனது இந்த எஸ்.எக்ஸ்.டி கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.

மஹிந்திராவின் புதிய என்யு_ஐக்யூ (nu_IQ) பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் புதிய எஸ்.எக்ஸ்.டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்யு_ஐக்யூ பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக உருவாக்குவது மட்டுமின்றி, பெட்ரோல்/ டீசல் என்ஜின் வாகனங்கள் மற்றும் ஹைப்ரீட் (Hybrid) வாகனங்களாகவும் உருவாக்க முடியும். இதனால், விஷன் எஸ்.எக்ஸ்.டி கான்செப்ட்டின் அடிப்படையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி, எரிபொருள் என்ஜின் வாகனங்களையும் வரும் ஆண்டுகளில் மஹிந்திரா அறிமுகம் செய்ய கூடும்.

mahindra freedom nu event

புதிய விஷன் எஸ்.எக்ஸ்.டி கான்செப்ட்டின் தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த கான்செப்ட் வாகனத்தின் முன்பக்கத்தில் கட்ட கட்டமான டிசைனில் ட்யூயல்-புரோஜெக்டர் ஹெட்லைட்கள், அதற்கு கீழே டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. பொனெட் மூடியின் மீது கூர்மையானதாக வழங்கப்பட்டுள்ள கிரீஸ்களும், வெட்டுகளும் இந்த விஷன் எஸ்.எக்ஸ்.டி கான்செப்ட் வாகனத்திற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன.

வாகனத்தின் முன்பக்கத்தில் ஹெட்லைட்களுக்கு கீழே மேட்-கருப்பு நிறத்தில் செவ்வக வடிவில் கிரில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கான்செப்ட் வாகனத்தின் மூலம் உருவாக்கப்படும் வாகனம் ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப முன்பக்க பம்பர் ஆஃப்-ரோடு ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன்பக்க பம்பருக்கு கீழே சில்வர் நிறத்தில் பாஷ் தட்டு பொருத்தப்பட்டு உள்ளது.

mahindra freedom nu event

இந்த கான்செப்ட் வாகனத்தின் பக்கவாட்டில், சக்கர ஆர்ச் பகுதிகளிலும், கதவுகளுக்கு கீழேயும் கூர்மையான கிரீஸ்கள் மற்றும் வளைவான கிளாடிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. முன் கதவுகளில் தார் வாகனத்தில் வழங்கப்படுவதை போன்று கைப்பிடிகள் வழங்கப்பட்டு இருக்க, பின் கதவுகளுக்கான கைப்பிடிகள் வாகனத்தின் C-பில்லரிலேயே இணைத்து வழங்கப்பட்டு உள்ளன.

இவை தவிர்த்து, வாகனத்தின் மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள், கேமரா சார்ந்த மிரர்கள் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வாகனத்தின் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு ஏற்ப கருப்பு நிறத்தில் ஸ்ட்ரிப் ஒன்று முன் கதவுகளுக்கு அருகாமையில் கொடுக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தியுள்ள விஷன் டி மற்றும் விஷன் எஸ்.எக்ஸ்.டி கான்செப்ட்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. இவை இரண்டில் இருந்தும், வரும் வருடங்களில் புதுமையான மஹிந்திரா தார் வாகனங்கள் அடுத்தடுத்தாக வர உள்ளன. இருப்பினும், அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2025, 17:16 [IST]
English summary
Mahindra showcased vision sxt concept vehicle at freedom nu event in mumbai
மேலும்... #mahindra #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X