ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் மஹிந்திரா காரை நீங்களும் சொந்தமாக்கலாம்! இப்போதைக்கு ரூ.25,000 போதும்!

மஹிந்திரா (Mahindra) தனது புதிய 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (XUV 7XO) எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை அறிவித்தப்படி டிசம்பர் 15ஆம் தேதியான இன்று மதியம் 12 மணியளவில் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (XUV700) காரின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பான இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.21,000 என்ற முன்பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

இதன் மூலம், இந்திய கார்கள் மார்க்கெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மஹிந்திரா காரை முன்கூட்டியே பெறும் வாய்ப்பைப் பெறலாம். வாடிக்கையாளர்கள், முன்பதிவின்போதே தங்களுக்கு விருப்பமான டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom), எரிபொருள் வகை மற்றும் என்ஜின் & கியர்பாக்ஸ் போன்றவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

mahindra xuv 7xo car pre-bookings start

புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ எஸ்யூவி காரை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் அல்லது நிறுவனத்தின் பிரத்யேக இணையத்தள பக்கத்தில் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். விரைவாக முன்பதிவு செய்பவர்கள் விரைவான முன்பதிவு வரிசையைப் பெற்று விரைவான டெலிவிரியை உறுதி செய்ய முடியும்.

மேலும், 2026 ஜனவரி 5 ஆம் தேதி காரின் அறிமுகத்திற்கு முன்னதாகவே, தங்கள் விருப்பமான டீலர்ஷிப், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை முன்பதிவின் போது தேர்வு செய்துகொள்ள முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் டீசர்கள், இந்த எஸ்யூவி புதிய இரட்டை-பாட் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

mahindra xuv 7xo car pre-bookings start

மேலும், எக்ஸ்யூவி700 காரில் இருந்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா 'எக்ஸ்இவி 9எஸ்' (XEV 9S) எலெக்ட்ரிக் காரில் உள்ளதைப் போல தலைகீழ் 'L' வடிவ எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளும் இதில் இடம்பெறும். வெளிப்புறத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மற்ற மாற்றங்களில், எக்ஸ்இவி 9எஸ் காரில் உள்ள அதே புதிய எல்இடி டெயில்லைட்களும் அடங்கும்.

அத்துடன், சில்வர் நிற ஸ்லாட்டுகளுடன் கூடிய புதிய கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மற்றும் ஏரோ கவர் கொண்ட புதிய அலாய் சக்கரங்கள் போன்றவையும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. டீசர் வீடியோக்கள், இந்த எஸ்யூவி காரின் கேபினுக்குள் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு இருக்கும் என்றும், இதில் எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் உள்ளதைப் போல மூன்று திரை அமைப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கின்றன.

மேலும், டேஷ்போர்டில் புதிய வடிவ ஏசி வென்ட்கள் போன்ற பிரீமியம் அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது.

mahindra xuv 7xo car pre-bookings start

புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ, 200 எச்பி மற்றும் 380 என்.எம் டார்க் கொண்ட 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினையும், 185 எச்பி மற்றும் 450 என்.எம் டார்க் திறன் கொண்ட 2.2 லிட்டர் டீசல் என்ஜினையும் தற்போதைய எக்ஸ்யூவி700 காரில் இருந்து தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், எக்ஸ்யூவி700 காரில் டீசல் என்ஜின் உடன் தற்போது கிடைக்கும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனும் புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி700, இந்திய சந்தையில் நீண்ட காலமாக அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் மேம்படுத்தப்பட்ட வெர்சன் உடன், உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா, எஸ்யூவி கார்கள் சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மஹிந்திரா நிறுவனம் 2026 ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 15, 2025, 13:52 [IST]
English summary
Mahindra starts pre bookings for xuv 7xo before 2026 january 5th launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X