போற-வரவங்கிட்டலாம் அடி வாங்குதே இந்த டாடா! ஹூண்டாயை சம்பவம் பண்ணிட்டிருந்த வேளையில டாடா கதைய முடிச்சுட்டாங்க!
நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விளங்கிக் கொண்டிருக்கின்றது. போறவங்க, வரவங்கிட்ட எல்லாம் அடி வாங்கும் கதையாக இந்த நிறுவனம் விற்பனையில் சில நிறுவனங்களிடம் அடி வாங்கத் தொடங்கி இருக்கின்றது. முன்னதாக மின்சார கார் விற்பனையில் எம்ஜி மோட்டார் (MG Motor)-இடம் அடி வாங்கிக் கொண்டிருந்த நிலையில், இப்போது மொத்த கார் விற்பனையில் மஹிந்திரா (Mahindra)விடம் அது அடி வாங்கத் தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
டாடா மோட்டார்ஸை விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் வீழ்த்தி இருக்கின்றது. இந்த நிறுவனத்தை மட்டுமல்ல ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தையும் அது விற்பனையில் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையிலேயே இந்த சம்பவத்தை மஹிந்திரா நிறுவனம் செய்து உள்ளது. இது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விற்பனையில் இரண்டாவது இடத்தை நீண்ட காலமாக தக்க வைத்து ஹூண்டாயை இரண்டு இந்திய நிறுவனங்கள் (மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ்) வீழ்த்தி இருப்பது வாகன உலகில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. முதல் இடத்தில் மாருதி சுஸுகியும், இரண்டாவது இடத்தில் மஹிந்திராவும், மூன்றாவது இடத்தில் டாடா மோட்டார்ஸும் உள்ளன.
இவர்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திலேயே ஹூண்டாய் உள்ளது. இதன் வாயிலாக இந்தியர்கள் மத்தியில் இந்திய தயாரிப்புகளுக்கு வரவேற்பு இரட்டிப்பாகி இருப்பது உறுதியாக தெரிய வந்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் மட்டும் தனி ஆளாக 2025 ஏப்ரல் மாதத்தில் 52,330 யூனிட் கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

அதேவேளையில், டாடா மோட்டார்ஸோ 45,199 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இதைவிட குறைவாக ஹூண்டாய் கார்கள் 44,374 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. டாடாவிற்கும், ஹூண்டாய்க்கும் இடையே இருப்பது மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்றால் இது தரமான சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
அதேநேரத்தில் இவர்கள் இருவரை விட 8 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைச் செய்து வாகன உலகில் மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய கொடியை நாட்டி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தார், எக்ஸ்யூவி மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இவற்றிற்கு மட்டுமல்ல எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலுக்கும் இந்தியாவில் சிறப்பான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் மற்றும் அதிக பாதுகாப்பு திறனைத் தாங்கிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடல்களாலேயே மஹிந்திரா நிறுவனம் தற்போது விற்பனையில் மாபெரும் சாதனையை நாட்டில் படைத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையின் தேவையைப் புரிந்து எஸ்யூவி கார் உற்பத்தியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. இதேபோல், பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய கார்களுக்கே அதிக முக்கியத்தும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலிலேயே அது இரட்டிப்பான வரவேற்பைப் பெற தொடங்கி இருக்கின்றது. இன்னும் இந்த நிறுவனம் சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களை விற்பனைக்கு வழங்கும் எனில் கூடுதலான விற்பனை வளர்ச்சியை அது காணக் கூடும்.


Click it and Unblock the Notifications








