10ல 6 பேர் இந்த காரை தான் வாங்குறாங்க! அப்படி இதுல என்னதாங்க இருக்குது!

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் மிகபெரிய அளவில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யும் நிறுனமாக இருக்கிது இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத் 52431 கார்களை வறி்பனவை செய்துள்ளன நிலையில் எஸ்யூவி மார்கெட்டில் 60 சதவீத மார்கெட் பங்கை 3 கார்களின் விற்பனையில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது. இப்படியாக இந்த நிறுவனம் எப்படியான விற்பனையை பெற்றுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த மே மாதம் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 52,431 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 43218 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. இந்த கார் 21 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

Mahindra Suv Sales 60 Share

இந்த காலகட்டத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ, தார் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய 3 கார்களின் விற்பனை 60 சதவீத பங்கைபிடித்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கடந்த மே மாதம் 14,401 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு விற்பனையை விட 5 சதவீத விற்பனை அதிகரிப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக மஹிந்திரா தார் கார் இருகு்கிறது. இ்நத கார் கடந்த மே மாதம் 10,389 கார்கள் விற்பனையாகியுள்ள. இது 81 சதவீத விற்பனை உயர்வை பெற்றுள்ளது.

அதே போல மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது. கடந்த மே மாதம் 6435 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் 28 சதவீதம் அளவிற்கு விற்பனை உயர்வை பெற்றுள்ளது. இந்த 3 எஸ்யூவி கார்களும் சேர்த்து 38225 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 60 சதவீதம் ஆகும்.

Mahindra Suv Sales 60 Share

இந்த 3 மாடல்களில் சிறப்பாக விற்பனையாவது ஸ்கார்பியோ கார் தான். இந்த காரில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மல்டிபிள் ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் கேமரா, உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை ஸ்கார்பியோ என் கார் ரூ13.99 லட்சம் முதல் ரூ25.15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 203 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Mahindra Suv Sales 60 Share

இந்த கார்கள் எல்லாம் அதிக சீட்டர் ஆப்ஷன் கொண்ட கார்களாக உள்ளன. இந்த கார்கள் எல்லாம் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களாக உள்ளன. இந்த ரக கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கும். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த ரக கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மீதான் டிரெண்ட் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த ரக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. வருங்காலங்களில் பெரும்பாலான கார்கள் இந்த மாடலில் தான் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 15, 2025, 20:00 [IST]
English summary
Mahindra suv sales 60 percent share scorpio thar xuv700 lead
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X