மஹிந்திராவின் அடுத்த சிக்ஸர்... நவ.26இல் பெரிய சம்பவம் நடக்க போகுது! காரில் இந்த வசதி எல்லாம் இருக்கா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெக்ட்ரிக் கார்களின் வெற்றியைத் தொடர்ந்து, இது மஹிந்திரா நிறுவனத்தின் மூன்றாவது எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். நவம்பர் 26 மற்றும் 27 அன்று பெங்களூருவில் நடைபெறும் 'ஸ்கிரீம் எலக்ட்ரிக்' (Scream Electric) நிகழ்வில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதிய காரை பற்றிய டீசர்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு டீசர் வெளியாகி உள்ளது. இதில், எக்ஸ்இவி 9எஸ் காரில் எலக்ட்ரிக் 'பாஸ் மோட்' (Boss Mode) வசதி இருக்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது காரின் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது.

mahindra xev 9e electric car teaser

இந்த வசதி குறித்த கூடுதல் விவரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம். புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி700 காரின் எலக்ட்ரிக் பதிப்பாக இருக்கலாம் (எக்ஸ்யூவி 7எக்ஸ் என மறுபெயரிடப்படலாம்). மஹிந்திராவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் வரிசையில், எக்ஸ்இவி 9எஸ் ஆனது எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு மேல் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதாவது, எக்ஸ்இவி 9இ காரில் உள்ள வசதிகளை விட, எக்ஸ்இவி 9எஸ் பல புதிய அம்சங்களுடன் வரவுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில், எக்ஸ்இவி 9எஸ் காரின் எலெக்ட்ரிக் மூலமாக செயல்படும் 'பாஸ் மோட்' வசதி காட்டப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் எக்ஸ்இவி 9இ கார்களில் 'பாஸ் மோட்' இருந்த போதிலும், அவை மேனுவலாக செயல்பட கூடியவையாக உள்ளன.

mahindra xev 9e electric car teaser

அதுவே, புதிய எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காரில் இந்த வசதி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. டீசரில், சீட் சாய்வு மற்றும் சீட் பேஸ் நிலையை கட்டுப்படுத்த நான்கு பொத்தான்கள் வழங்கப்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எலக்ட்ரிக்கலாக இயங்கும் பின் இருக்கைகள் அதிகபட்ச சொகுசு பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எக்ஸ்இவி 9எஸ் காரில் திறக்கக்கூடிய பனோரமிக் சன்ரூஃப் (எக்ஸ்இவி 9இ காரில் இல்லாத அம்சம்), மூன்று திரைகள் கொண்ட டேஷ்போர்டு, இரு நிலைகளில் கிளைமேட் கண்ட்ரோல், BYOD வசதி, பிரீமியம் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், காற்றோட்டமான லெதரெட் இருக்கைகள், டிஜிட்டல் கீ மற்றும் ஆட்டோ பார்க்கிங் வசதி போன்ற பல அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

mahindra xev 9e electric car teaser

மேலும், லெவல்-2 ADAS பாதுகாப்பு அம்சங்கள், முழு LED விளக்குகள் எனப் பல்வேறு நவீன வசதிகளும் இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளன. பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார்களைப் போலவே புதிய எக்ஸ்இவி 9எஸ் காரும் மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார், மற்ற இரண்டு எலெக்ட்ரிக் கார்களைப் போலவே, 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரலாம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால், ஏசி இயக்கப்பட்டாலும், 500 கிமீ ரேஞ்சை மஹிந்திரா உறுதியளிக்கிறது. புதிய எக்ஸ்இவி 9எஸ் காரில் டூயல்-மோட்டார் டிரைவ்டிரெய்ன் கட்டமைப்பு இடம்பெற வாய்ப்புள்ளது. இது காரின் ஆஃப்-ரோடு திறன்களை மேம்படுத்தும். பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களில் ஒரேயொரு மோட்டார் மட்டுமே பின் சக்கரங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

mahindra xev 9e electric car teaser

டிரைவ்ஸ்பார்க் கருத்து: "அமைதிக்கும், எல்லாவற்றிற்கும் இடம்" என்ற வாசகத்துடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் மூலம் எக்ஸ்இவி 9எஸ் காரின் மூன்று இருக்கை வரிசைகளிலும் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள தனித்துவமான பயண அனுபவத்தை மஹிந்திரா உறுதிப்படுத்துகிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ், பெங்களூருவில் நடைபெறும் 'ஸ்கிரீம் எலக்ட்ரிக்' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், இது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் 7-சீட்டர் எஸ்யூவி கார் என்கிற பெருமையைப் பெறவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 21:27 [IST]
English summary
Mahindra teased xev 9e electric car rear seat feature check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X