ஜனவரியில் புதுசா வரும் மஹிந்திரா காரை வாங்க இதுக்கு மேல என்ன காரணம் வேணும்!! ஹைப்பை கூட்டும் டீசர்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV 7XO) கார் 2026 ஜனவரி 5 அன்று வெளியாகிறது. இது தற்சமயம் விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி700 (XUV700) காரின் மேம்பட்ட பதிப்பு ஆகும். இந்த நிலையில், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் 1,400 வாட்ஸ் திறன் கொண்ட 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் (Harman Kardon Audio System) உள்பட பல அதிநவீன வசதிகளை இந்த புதிய மஹிந்திரா கார் பெற்றுவர உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக டீசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் கார்களுள் ஒன்றான எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் வருகிற புதிய 2026ஆம் ஆண்டை புதிய அப்கிரேட் உடன் துவங்க உள்ளது. எக்ஸ்யூவி300 காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டதை போன்று எக்ஸ்யூவி700 காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனும் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்கிற பெயரில் வருகிறது.

mahindra teases new xuv 7xo

பெயரில் மட்டுமன்றி, தோற்றத்திலும் மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுவரும் புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் உட்புறத்தில், டாஷ்போர்டு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மஹிந்திராவின் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் ட்ரிபிள்-ஸ்கிரீன் லேஅவுட்டைப் பெறும் முதல் எரிபொருள் என்ஜின் கார், எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ ஆகும். மேலும் ஏற்கனவே கூறியதுபோல், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டத்தையும் இந்த கார் பெற்றுவர உள்ளது.

இது தற்போதைய எக்ஸ்யூவி700 காரின் 12-ஸ்பீக்கர் சோனி சிஸ்டத்தை காட்டிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ஆகும். இவை மட்டுமன்றி, இந்த காரின் பனோரமிக் சன்ரூஃப், புதிய பழுப்பு மற்றும் இளம் பழுப்பு நிறத்திலான இரட்டை-வண்ண கேபின், மறுவடிவமைக்கப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவையும் கவனத்தை ஈர்க்கின்றன.

mahindra teases new xuv 7xo

அதேநேரம், இந்த காரின் விலைமிக்க முழு வசதிகள் கொண்ட 'ஏ.எக்ஸ்7எல்' (AX7L) வேரியண்ட்டில், மேம்படுத்தப்பட்ட டோர் பேட்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர் வென்ட்கள் மற்றும் நவீன அப்ஹோல்ஸ்டரி ஆகியவை இடம்பெறும். காரை சுற்றியுள்ள பல கேமராக்களின் மூலம் விரிவான பார்வையை வழங்கும் புதிய 540-டிகிரி கேமரா சிஸ்டத்தை மஹிந்திரா இந்த காரில் வழங்கவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

டிரைவர் உதவி அம்சங்களின் நிகழ்நேர செயல்பாடுகளைக் காட்டும் மேம்பட்ட அடாஸ் (ADAS) காட்சியமைப்பும் இதில் உள்ளது. பின் இருக்கை சௌகரியமும் இன்போடெயின்மென்டும் இன்-கார் தியேட்டர் மோட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது பயணிகளை அவர்களின் சொந்த சாதனங்கள் வழியாக தியேட்டர் அனுபவத்தை பெற உதவுகிறது. இன்போடெயின்மென்ட், கனெக்ட்டிவிட்டி மற்றும் வாகன நுண்ணறிவை நிர்வகிக்கும் Adrenox+ பிளாட்ஃபார்ம் மூலம் இந்த இன்-கார் தியேட்டர் அனுபவம் கட்டுப்படுத்தப்படுகிறது.

பாஸ் மோட் இருக்கை மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவை புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் பிற சிறப்பம்சங்கள் ஆகும். இவற்றுடன், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) காரின் புதிய லைட்டிங் சிஸ்டத்தை புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரும் பெறுகிறது. இதன்படி, திருத்தப்பட்ட LED பகல்நேர ரன்னிங் விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் முழு அகல லைட் பார் உடன் இணைந்த தனித்துவமான தலைகீழ் L-வடிவ பின்பக்க லைட் அமைப்பு போன்றவை அடங்கும்.

mahindra teases new xuv 7xo

புதிய அலாய் சக்கர வடிவமைப்புகள், புதிய வெளிப்பக்க நிறங்கள், மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் செங்குத்தான க்ரோம் ஆக்சென்ட்களுடன் கூடிய கிரில் ஆகியவை காரின் வெளிப்புறத் தோற்றத்தைப் புதுப்பிக்கின்றன. இத்தனை நீண்ட மேம்பாடுகள் இருந்தபோதிலும், மஹிந்திரா அதன் எக்ஸ்யூவி700 காரின் என்ஜின் ஆப்ஷன்களை மாற்றும் என்று தோன்றவில்லை.

இதன்படி, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் தொடர்ந்து வழங்கப்படும். எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காருக்கான முன்பதிவுகள் ரூ.21,000 முன்பதிவு தொகையுடன் 2026 ஜனவரி 5ஆம் தேதிக்கு முன்னதாகவே ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மூலம் அடைந்த வெற்றியை போல், எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் மூலமாகவும் வெற்றியை பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது. அதன் வெளிப்பாடே 2026ஆம் ஆண்டை புதிய எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காருடன் துவங்கும் இந்த நிறுவனத்தின் யுக்தி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 29, 2025, 21:49 [IST]
English summary
Mahindra teases new xuv 7xo suv car ahead of january 5 launch check all details here
மேலும்... #mahindra #mahindra xuv700 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X