நாடே இந்த காருக்கு தான் காத்துகிடக்குது! செப்1ம் தேதி இந்த கார் வருவது கன்ஃபார்ம்!
மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரை இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தனது 3 டோர் தார் காரை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன்படி அப்டேட் செய்யப்பட்ட கார் செப்டம்பர் மாதம் 1ம் தேதி விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் ஆஃப்ரோடு எஸ்யூவி செக்மெண்டில் தார் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக 3 டோர் கொண்ட காரை தான் விற்பனை செய்து வந்த நிலையில் இதே செக்மெண்டில் 5 டோர் கொண்ட காராக மாருதி நிறுவனம் ஜிம்னி காரை களம் இறக்கியது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனமும் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷன் காராக தார் ராக்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரும் மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. தற்போது தார் காருக்கு 4-6 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்நிலையில் இந்த 3 டோர் வெர்ஷன் காரின் இரண்டாம் தலை முறை கார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது அதன் பிறகு பெரிய மாற்றம் இல்லை.
இந்நிலையில் இந்த காருக்கு ஒரு மிட் -லைஃப் அப்டேட்டை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட கார் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக வரும் செப்டம்பர் 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று மஹிந்திரா நிறுவனம் 4 புதிய கான்செப்ட் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தார் கார் தான் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தயாரித்து அதை சோதனை செய்து வருகிறது. அஇந்த கார் 2026ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா தார் காரை பொருத்தவரை தார் ராக்ஸ் காரின் வடிவமைப்பு பல இதில் இருக்கிறது. இதன் முன்பக்க பம்பர் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஃபாக் லைட் வடிவமைப்பில் மாற்றம் உள்ளது. இந்த காருக்க மார்டனான லுக் கிடைக்கிறது. C வடிவ எல்இடி லைட் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது போக புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுள்ளன.

இந்த காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக கியர் லிவர் இருக்கும் பகுதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீல் முழுமையாக புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய காராக தான் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் காருக்கு மக்கள் மத்தயில் மவுசு இருக்கிறது. இந்த கார் தற்போது நவீன அப்டேட் உடன் வருவதால் இதன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









