உலகத்துல வேற எந்த கார்லயும் இந்த சவுண்ட் சிஸ்டம் கிடையாது! தியேட்டர் மாதிரி சவுண்ட் சிஸ்டம்!
வாகனங்களில் பாடல் கேட்டுக்கொண்டே பயணிப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இன்று 90 சதவீத மக்கள் பாடல் கேட்டுக்கொண்டே பயணிப்பதை விரும்புகின்றனர். இந்த நிலையில், உலகத்திலேயே வேறு எந்த காரிலும் இல்லாத வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் காரில் ஓர் புதுமையான சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் காரின் ஏஎக்ஸ் 7எல் வேரியண்டில் புதிய அப்டேட் ஒன்றை செய்துள்ளது. தார் ராக்ஸ் வாகனத்தின் இந்த விலைமிக்க வேரியண்ட்டில் 9 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இந்த சிஸ்டம் 4 சேனல் ஸ்பேடிக்கல் ஆடியோ தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது. இதற்காக மஹிந்திரா நிறுவனம் டால்பி (Dolby) நிறுவனத்துடன் இணைந்து இதை செய்துள்ளது.

இன்றைய கால வாகனங்களில் டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும், 4-சேனல் டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் உலகிலேயே முதல் எஸ்யூவி வாகனமாக மஹிந்திரா தார் ராக்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. தார் ராக்ஸ், ஆஃப்ரோடு அம்சங்களுடன் இருக்கிறது. இந்த கார் ரக்கட் லுக் உடன் எந்த சாலையிலும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காரில் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் எப்படி திருப்பங்களில் துல்லியமாக செயல்படுமே அதே போல இந்த சவுண்ட் சிஸ்டமும் மிக துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிஸ்டம் காரில் உள்ள என்டர்டெயின்மென்ட் சிஸ்டத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த சிஸ்டத்தை பயன்படுத்த இதில் உள்ள கானா ஆப்பை பயன்படுத்தலாம். அது வேறு எந்த கருவியும் இல்லாமல் 4-சேனல் டால்பி அட்மாஸ் சவுண்டை ஸ்டிரீம் செய்ய உதவும். இதனால் நீங்கள் காரில் ஏறி அமர்ந்து பிளே லிஸ்டை தயார் செய்து பயணிக்க வசதியாக இருக்கும். வாகனத்தின் ஒட்டுமொத்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காருக்கான புக்கிங் குவிந்து வரும் நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த புதிய அப்டேட்டின் மூலமாக இந்த காரின் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த காரில் உள்ள 4-சேனல் ஸ்பெட்டிக்கல் சவுண்ட் சிஸ்டம் துல்லியமான சத்தத்தை வெளிப்படுத்துகிறது. இதில் 3டி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான சரவுண்ட் சிஸ்டம் இல்லாமல், திரைபடம், மியூசிக், கேமிங் என அனைத்து விதத்திலும் இந்த சவுண்ட் சிஸ்டம் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

மஹிந்திரா தார் ராக்ஸ் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது போக, இந்த காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 அடாஸ், ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த கார் ரூ12.99 லட்சம் என்கிற விலையில் இருந்து இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உலகில் வேறு எந்த காரிலும் இல்லாத தொழிற்நுட்பத்தை தார் ராக்ஸ் காரில் மஹிந்திரா பொருத்தியிருப்பது நிச்சயம் வரவேற்க்கதக்கது தான். அதிலிலும், வழக்கமான டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டத்தை வழங்காமல், 4-சேனல் டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்க்கிறது. இந்த சவுண்ட் சிஸ்டத்தை மற்ற கார்களிலும் கொண்டு வந்தால் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









