15கிமீ மைலேஜ் தரும் வாகனத்தில் சைலண்ட்டாக மஹிந்திரா செய்திருக்கும் மாற்றம்! இதுக்காகவே எல்லாரும் வாங்க போறங்க

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் அதிக பேரால் விரும்பி வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில்தான் இதனை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் ஜிம்னி (Jimny)-ஐ விற்பனை செய்துவரும் போதிலும், தார் ராக்ஸ் வாகனத்தின் விற்பனையை முறியடிக்க முடியவில்லை. இந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனத்தின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, இந்த மஹிந்திரா வாகனத்தில் புதியதாக சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே 3-கதவுகள் உடன் தார் வாகனம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் 5-கதவு வெர்சனாக கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தின்போது தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. கூடுதல் கதவுகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டதால், தார் ராக்ஸின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தோம்.

thar roxx gets new features

அதேபோல், கேபினுக்குள் அதிக இடவசதியை எதிர்பார்த்தவர்கள் தார் ராக்ஸ் வாகனத்தை வாங்க ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தார் ராக்ஸின் விற்பனை அதிகரித்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மஹிந்திராவின் சிறந்த விற்பனை வாகனங்களுள் ஒன்றாக தார் ராக்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில்தான், தார் ராக்ஸின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக புதியதாக 3 வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்களாக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதிகளாவன, கீலெஸ் எண்ட்ரீ (Keyless Entry), ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் (Sliding Armrest) மற்றும் ஏரோ வைபர்கள் (Aero Wipers) ஆகும். இதில், கீலெஸ் எண்ட்ரீ ஆனது எளிதாக வாகனத்திற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் வழிவகை செய்யக்கூடியது ஆகும். அதாவது, காருக்கான சென்சார் சாவியை கையில் வைத்திருந்தால் போதும்.

thar roxx gets new features

குறிப்பிட்ட தொலைவிலேயே சென்சார் உங்களது தார் ராக்ஸ் வாகனத்தின் கதவை அன்லாக் செய்துவிடும் என்பதால், நீங்கள் நேராக கதவை திறந்து உள்ளே செல்லலாம். ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் ஆனது பயணத்தின் போது பயணிகள் தங்களது கைகளை ஓய்வுக்காக வைத்துக் கொள்ள பயன்படக்கூடியது ஆகும். இது ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் ஆக வழங்கப்பட்டுள்ளதால், சற்று சாய்வாக சவுகரியமாக இருக்கும்.

ஏரோ வைபர்கள் ஆனவை வழக்கமான வைபர்களை காட்டிலும் விரைவாக விண்ட்ஷீல்டை சுத்தம் செய்யக்கூடியவை ஆகும். தட்டையான டிசைனில் உள்ள இந்த ஏரோ வைபர்கள் வாகனத்தின் காற்று இயக்கவியல் பண்பிற்கு ஏற்றவைகளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த 3 புதிய வசதிகளை தவிர்த்து, மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தில் வேறெந்த புதிய அப்டேட்களும் வழங்கப்படவில்லை.

thar roxx gets new features

பல்வேறு விதமான வேரியண்டகளில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன. இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தில் 2 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இவை இரண்டுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து, என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் வேறுப்படுகின்றன. இதில், டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ரியர்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடனும், டீசல் என்ஜின் ஆனது ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.

thar roxx gets new features

டாங்கோ ரெட், டீப் ஃபாரஸ்ட், நெபுலா ப்ளூ, ஸ்டீல்த் பிளாக், பேட்டில்ஷிப் கிரே, எவரெஸ்ட் வெள்ளை மற்றும் பர்ண்ட் சியான்னா என மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் கிடைக்கிறது. பாதுகாப்பு அம்சங்களாக, 6 ஏர்பேக்குகள், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், செண்ட்ரல் லாக்கிங், டே& நைட் ரியர் வியூ மிரர், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூஷன் உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்திற்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்துவரும் நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக புதியதாக 3 வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை தார் ராக்ஸ் வாகனத்தின் பலத்தை மேலும் அதிகரித்து இருப்பதுடன், இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் பயணிகள் பெறக்கூடிய சவுகரியத்தையும் மேம்படுத்தி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 19, 2025, 12:14 [IST]
English summary
Mahindra thar roxx 5 door gets new 3 features for 2025
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X