ஷோரூமுக்கு வரவங்க எல்லாரும் இந்த கலரை கேட்டு வாங்க போறாங்க! மஹிந்திரா சொன்னதை செய்து காட்டிடுச்சி
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களுள் ஒன்று, தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மஹிந்திரா வாகனத்தை அதற்குள்ளாகவே சிலர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர். இதனாலேயே கஸ்டமர்களுக்கு வேலை வைக்க வேண்டாம் என்பதற்காக மஹிந்திரா நிறுவனமே தங்களது தார் ராக்ஸ் வாகனத்தை அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில், பிரவுன் நிறத்திலான கேபின் உடன் தார் ராக்ஸ் வாகனம் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்த குறிப்பிட்ட தார் ராக்ஸ் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்தியாவில் மாருதி ஜிப்ஸி, மஹிந்திரா தார் போன்ற ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களை வாங்குவதற்காக என்றே நிறைய பேர் இருக்கின்றனர்.

குறிப்பாக, ஏற்ற, இறக்கம் நிறைந்த மலைப்பிரதேச பகுதிகளில் வசிப்போரின் முதன்மையான தேர்வாக இவ்வாறான எஸ்யூவி வாகனங்கள் உள்ளன. அத்தகையவர்களை கவரும் முயற்சியாக 2020இல் தார் வாகனத்தை மேம்படுத்தி புதிய தோற்றத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் தார் ராக்ஸ் வாகனத்தை அறிமுகம் செய்தது.
தார் 3-கதவு வாகனத்தை காட்டிலும் கூடுதல் கதவுகள் உடன் 5-கதவு மாடலாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதல் கதவுகள் உடன் தார் 3-கதவு வாகனத்தை விட விசாலமான கேபின் உடன் கிடைத்ததினாலேயே தார் ராக்ஸ் வாகனத்தை பலரும் போட்டி போட்டு வாங்க ஆரம்பித்தனர்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனத்தை கடந்த 6 மாதங்களில் பலர் பெற்றுள்ள நிலையில், அவர்களுள் சிலர் அந்த வாகனத்தை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர். அதேநேரம், மஹிந்திராவும் அவ்வப்போது தார் ராக்ஸ் வாகனத்தை கஸ்டமர்களை கவரும் விதமாக மாற்றி விடுகிறது.
இதன் மூலமாக தார் ராக்ஸ் வாகனத்தின் விற்பனை ஆனது சீராக இருந்து வருகிறது. அறிமுகத்தின்போது தார் ராக்ஸ் வாகனத்தில் வெள்ளை மற்றும் கருப்பு என ட்யூயல்-டோன் நிறத்தில் கேபின் வழங்கப்பட்டது. இதில் வெள்ளை நிறமானது விரைவாக அழுக்காகி விடுவதாகவும், இதனால் பராமரிப்பது சிரமமாக உள்ளதாகவும் சில கஸ்டமர்கள் தெரிவித்தனர்.

இதனால், வெள்ளை நிறத்திற்கு பதிலாக மோச்சா ப்ரவுன் (Mocha Brown) உடன் கருப்பு நிறத்தை வழங்க போவதாக மஹிந்திரா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி தற்போது அத்தகைய கேபினை கொண்ட தார் ராக்ஸ் வாகனங்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கி உள்ளன. இந்த தார் ராக்ஸ் வாகனத்தில் கதவுகளின் உட்பக்க பேட்களும் மோச்சா பிரவுன் நிறத்தில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு வாகனத்திலும் விரைவாக அழுக்கடைவது உட்புற கேபின் ஆகும். ஆதலால், அதனை எளிதில் அழுக்கு அடையாத வகையிலான நிறத்தில் வழங்குவது அவசியமாகும். அதை தான் தற்போது மஹிந்திரா செய்துள்ளது. வாடிக்கையாளரின் தேவையை அறிந்து உடனடியாக அதனை மஹிந்திரா செய்துக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும்.


Click it and Unblock the Notifications









