இனி வாங்க போகும் கஸ்டமர்கள் குடுத்து வெச்சவங்க! மஹிந்திரா நிறுவனத்துக்கு இப்போவாவது இது தோணிச்சே...!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் வாகனம், தார் ராக்ஸ் (Thar ROXX) ஆகும். மஹிந்திராவில் இருந்து சிறப்பாக விற்பனையாகக்கூடிய ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக 3-கதவு தார் (Thar) கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் 5-டோர் வெர்சனாக புதிய தார் ராக்ஸ் கடந்த 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனத்தில் மிக முக்கியமான மாற்றத்தை மஹிந்திரா செய்துள்ளது.

மஹிந்திரா, இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமின்றி, கார்கள் விற்பனையிலும் மஹிந்திரா முன்னணியில் உள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மஹிந்திராவின் வளர்ச்சி கவனிக்கத்தக்க அளவிற்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மஹிந்திராவில் இருந்து அவ்வப்போது புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்படுவதாகும்.

thar roxx gets mocha grey

அதேநேரம், ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களிலும் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை கொண்டுவந்து, மக்களை கவர்வதையும் மஹிந்திரா மறப்பதில்லை. அந்த வகையில், தார் ராக்ஸ் வாகனத்தில் ஒரு முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் வாகனத்தின் உட்புற கேபின் ஆனது பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டது.

அதாவது, வாகனத்தின் உட்புறம் பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் அலங்கரித்து கொடுக்கப்பட்டது. இதனை 'ஐவோரி வெள்ளை' (Ivory White) என மஹிந்திரா நிறுவனம் அழைத்தது. ஆனால், இந்த நிறத்திற்கு கஸ்டமர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். கரடு முரடான மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு தார் ராக்ஸ் வாகனத்தை கொண்டு செல்லும்போது, அதன் வெள்ளை நிறத்திலான கேபின் எளிதில் அழுக்காகி விடுவதாக தெரிவித்தனர்.

thar roxx gets mocha grey

இதனால் அவ்வப்போது கேபினை சுத்தம் செய்ய வேண்டி இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து குற்றச்சாட்டுகள் வந்ததை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் வாகனத்திற்கு ஐவோரி வெள்ளை நிறத்திற்கு பதிலாக 'மோச்சா கிரே' (Mocha Grey) நிறத்திலான கேபினை வழங்க ஆரம்பித்துள்ளது. புதிய மோச்சா கிரே நிறத்திலான தார் ராக்ஸ் வாகனங்கள் டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms)-க்கு வர துவங்கியுள்ளன.

அதில், ஒரு தார் வாகனத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், புதிய மோச்சா கிரே நிறத்தில் கேபினை கொண்ட தார் ராக்ஸ் வாகனங்களின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தார் ராக்ஸ் வாகனத்தின் 4x2 மற்றும் 4x4 வெர்சன்கள் இரண்டிலும் ஐவோரி வெள்ளை நிற கேபின் வழங்கப்பட்டு வந்தன.

thar roxx gets mocha grey

அதனை தொடர்ந்து, கஸ்டமர்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கடந்த அக்டோபர் மாதத்தில் விலைமிக்க 4x4 வெர்சன்களில் மட்டும் 'மோச்சா பிரவுன்' (Mocha Brown) நிறத்தில் கேபினை வழங்க மஹிந்திரா ஆரம்பித்தது. இந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனத்தின் இரு வெர்சன்களிலும் ஒரே மாதிரியாக மோச்சா கிரே நிற கேபின் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மோச்சா கிரே நிற கேபினும் வெள்ளை நிறத்தில்தான் உள்ளது என்றாலும், கிரே கலந்த வெள்ளை நிறத்தால் அழுக்குகள் படிந்தாலும் வெளியே தெரியாது. இந்த புதிய கலர் ஆப்ஷனிலும், வாகனத்தினுள் டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கரம் மற்றும் டோர் பேட்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் கருப்பு & மோச்சா கிரே என ட்யூயல்-டோன் நிறங்களில் கிடைக்கும்.

thar roxx gets mocha grey

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் விற்பனை ஏற்கனவே சிறப்பாக இருந்து வருகிறது. இருப்பினும், இவ்வாறான சிறு சிறு அப்டேட்களை மஹிந்திரா கொண்டுவருவதன் மூலமாக இந்த வாகனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். இருப்பினும், அதற்கு முன்னதாக இந்த புதிய மோச்சா கிரே நிற கேபினுக்கு கஸ்டமர்கள் மத்தியில் இருந்து எவ்வாறான கருத்துக்கள் கிடைக்க போகின்றன என்பதுதான் முக்கியமாகும்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 11:19 [IST]
English summary
Mahindra thar roxx gets mocha grey color cabin replacing ivory white
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X