ஷோரூமில் இருந்து எடுத்த உடனே எந்த தைரியத்தில் இப்படி பண்றாங்க? இன்ஸ்சூரன்ஸ் க்ளைம் பண்ண முடியுமா?
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் ஜிம்னி (Jimny) வாகனத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தார் ராக்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இந்த வாகனத்தை வாங்கிய கஸ்டமர்களுள் ஒருவர், தனது தார் ராக்ஸ் வாகனத்தின் நிறத்தை வேற லெவலுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். அதனை பற்றியும், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக வாகனங்களுக்கு கடந்த பல வருடங்களாகவே குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. அதாவது, இத்தகைய வாகனங்களை வாங்குவதற்கும் நம் நாட்டில் கணிசமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். முந்தைய காலங்களில் மாருதி சுஸுகி ஜிப்ஸியை அதிக பேர் வாங்கினர். பழைய படங்களில் எல்லாம் ஜிப்ஸி வாகனத்தை பரவலாக போலீஸ் வாகனமாக காட்டி இருப்பார்கள்.

இதற்கு போட்டியாக, மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து தார் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜிப்ஸியின் விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், தார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 2ஆம் தலைமுறை தார் (3-கதவு) வாகனத்திற்கு போட்டியாக 2023இல் மாருதி சுஸுகி நிறுவனம் ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னியை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இருப்பினும், ஜிம்னியை மக்கள் அதிகமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில், கடந்த 2024இல் தார் ராக்ஸ் 5-கதவு வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. இதன் வருகையால், ஜிம்னியின் விற்பனை மொத்தமாக படுத்தே விட்டது. கடந்த சில மாதங்களாகவே, ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 7,500 தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுவே, ஜிம்னி மாதத்திற்கு 500 விற்பனையாகினாலே ஆச்சிரியம் என்கிற நிலையில் உள்ளது.

இந்த அளவிற்கு மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் தார் ராக்ஸ் வாகனத்தின் நிறத்தை இங்கு ஒரு கஸ்டமர் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளார். இதனை அவர், ஷோரூமில் இருந்து வாகனத்தை டெலிவிரி பெற்ற உடனே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட தார் ராக்ஸ் வாகனத்தில் இருக்கும் சிவப்பு நிறத்தை 'டாங்கோ சிவப்பு' (Tango Red) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது.
இந்த சிவப்பு நிறத்தில்தான் ஷோரூமில் வாங்கிய போதும் இந்த தார் ராக்ஸ் வாகனம் இருந்துள்ளது. வாகனத்தின் மேற்கூரை மட்டும் கருப்பு நிறத்திலும், வாகனத்தின் மற்ற பகுதிகள் அனைத்தும் டாங்கோ சிவப்பு நிறத்திலும் இருந்தன. அதாவது, வாகனத்தின் கதவுகள் முழுவதுமாக டாங்கோ சிவப்பு நிறத்தில் இருந்தன. அதனை இந்த வாகனத்தின் ஓனர் வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளார்.

அதாவது, மேற்கூரையின் கருப்பு நிறத்தை வாகனத்தின் மேல்பாதி பகுதி முழுவதற்கும் அவர் மாற்றியுள்ளார். இதற்காக, திட்டமிட்டப்படி ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுத்ததும் வேறொரு பெயிண்ட் ஷாப்புக்கு கொண்டு சென்றுள்ளார். வாகனத்தின் மேல்பாதியை மாற்றியது மட்டுமின்றி, வாகனத்தை சுற்றி இருந்த சில்வர் நிற பகுதிகளையும் கருப்பு நிறத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், இவ்வாறான சிவப்பு- கருப்பு ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் தார் ராக்ஸ் பார்ப்பதற்கு சூப்பராக உள்ளது. இதனை தொழிற்சாலையிலேயே செய்து கொடுக்க மஹிந்திரா முயற்சித்தால் நன்றாக இருக்கும். தனியாக நாமாக இவ்வாறு வாகனத்தை மாற்றிக் கொண்டால், இன்ஸ்சூரன்ஸ் பாதிக்குமா என்பதை டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகள் உடன் ஒருமுறை பேசி ஆலோசித்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications









