3 கதவு கொண்ட காருக்கு இப்படி ஒரு வரவேற்பா! 2 லட்சம் யூனிட் விற்பனையாகிருச்சு! அதுவும் இவ்ளோ குறுகிய நாட்களிலா!

இந்தியாவில் மூன்று கதவுகளை மட்டுமேக் கொண்ட கார் மாடல் ஒன்றிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வேறு எதுவும் இல்லைங்க, மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் மாடல்தான் அது. தார், இந்தியாவில் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் என இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐந்து கதவுகளைக் கொண்டது தார் ராக்ஸ் (Thar Roxx) என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது விற்பனைக்கு வந்த போதிலும் 3 கதவுகளை மட்டுமே கொண்ட தார் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமான ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. 2 லட்சம் யூனிட்டுகளைக் கடந்து விற்பனையில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப்பதாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த காரை முதன் முதலில் 2020 ஆம் ஆண்டிலேயே மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியது.

Mahindra thar 2 lakh sales milestone

மிக சிறந்த ஆஃப்-ரோடு மற்றும் லைஃப்-ஸ்டைல் வாகனமே தார் ஆகும். இந்த திறனே மிக சிறப்பான வரவேற்பை இந்த காருக்கு இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதன் விளைவாகவே விற்பனையில் 2 லட்சம் யூனிட்டுகள் எனும் மாபெரும் சாதனையையும் தார் தற்போது படைத்திருக்கின்றது.

பல்வேறு காரணங்களுக்காக இந்த கார் மாடல் இந்தியர்களின் ஃபேவரிட்டானதாக மாறியிருக்கின்றது. மிக முக்கியமாக ஆஃப்-ரோடுகளை சமாளிப்பதற்கான சகல வசதிகளையும் இது தாங்கியிருப்பதே மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. இதுதவிர, நவீன யுகத்திற்கு ஏற்ற சிறப்பம்சங்களையும் இந்த காரில் மிக அதிகளவில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.

Mahindra thar running shot

அந்தவகையில், 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சாவியில்லாமலேயே காருக்குள் நுழையும் வசதி, பவர் விண்டோ, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் மேனுவல் ஏசி உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

லிஸ்ட் இதோட முடியவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் செய்யும் உதவியாக இருப்பதற்காக கேமிரா, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின் விஷயத்திலும் இந்த காரில் பன்முக தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 1.5 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல், 2.0 லிட்டர் எம் ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போ டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.

3 டோர் தார் காருக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே 5 டோர் தார் ராக்ஸ்-க்கும் தரமான வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், விரைவிலேயே இந்த வெர்ஷனும் விற்பனையில் இதுமாதிரியான புதிய சாதனைகளை நாட்டில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிகுறிகளே இப்போது தெரிந்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் தார் ராக்ஸ் ரூ. 12.99 லட்சம் தொடங்கி ரூ. 22.49 லட்சம் என்கிற விலையிலும், தார் கார் மாடல் ரூ. 11.35 லட்சம் தொடங்கி ரூ. 17.60 லட்சம் என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற போதிலும் இந்தியாவில் தார் ராக்ஸ் மற்றும் தார் இரண்டிற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு பரந்த எஞ்சின் தேர்வு மற்றும் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதீத பாதுகாப்பு திறன் ஆகியவற்றை இந்த இரண்டு வெர்ஷன்களும் கொண்டிருப்பதே காரணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 6, 2025, 23:27 [IST]
English summary
Mahindra thar surpasses 2 lakh sales milestone in india since launch in 2020
மேலும்... #mahindra #mahindra thar #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+