மாருதி செலவுல மஹிந்திராவுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த காரை இத்தனை ஆயிரம் பேர் வாங்குறாங்களா?

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் அதற்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி காரை இந்திய மார்கெட்டில் களம் இறக்கியது. இந்த கார் தார் கார் விற்பனையை பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிம்னி காரின் வருகைக்கு பிறகு தார் காரின் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது மாருதி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனையும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் எஸ்யூவி கார்கள் தான் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதே நேரம் ஆஃப்ரோடு அம்சம் கொண்ட கார்கள் எல்லாம் சிறப்பு வரவேற்பு இருக்கிறது.

Thar vs Jimny Sales

மஹிந்திரா நிறுவனம் 3 டோர் கொண்ட தார் காரை விற்பனை செய்து வந்த நிலையில் மாருதி நிறுவனம் 5 டோர் கொண்ட ஆஃப்ரோடு எஸ்யூவி காரான ஜிம்னி காரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த கார் வரும்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கார் தார் காரின் விற்பனையை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது நிலைமை தலைகீழாக இருப்பது தெளிவாக தெரிகிறது. மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 682 ஜிம்னி காரை தான் விற்பனை செய்துள்ளது. இதுவும் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வெறும் 274 ஜிம்னி கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த மாதம் 431 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது அதிகம் தான் என்றாலும் தார் காரின் விற்பனையை ஒப்பிடும் போது மிக குறைவாகவே விற்பனையாகியுள்ளது.

Thar vs Jimny Sales

மஹிந்திரா நிறுவனம் மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற 5 டோர் காரை அறிமுகப்படுத்திய பிறகு இந்த காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து தனது தார் காரின் 5டோர் வெர்ஷன் காராக தார் ராக்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. அதுவரை மஹிந்திரா நிறுவனம் வெறும் 3 டோர்வெர்ஷன் கொண்ட காரை தான் விற்பனை செய்து வந்தது.

இந்த 5 டோர் வெர்ஷன் காரான தார் ராக்ஸ் காரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொண்டு வந்திருப்பது அதன் விற்பனை விபரங்களில் நமக்கு தெளிவாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் மொத்தம் 9542 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது தார் 3 டோர் வெர்ஷன் கார் மற்றும் தார் ராக்ஸ் என்ற 5 டோர் வெர்ஷன் கொண்ட காரின் ஒட்டு மொத்த விற்பனையாகும்.

Thar vs Jimny Sales

தொடர்ந்து தார் காரின் விற்பனை அடுத்தடுத்த மாதங்களிலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்ரோடு எஸ்யூவி செக்மெண்டை பிடிக்க மாருதி நிறுவனம் ஜம்னி காரை கொண்டு வந்து யுக்தி செய்த நிலையில் அதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை தார் ராக்ஸ் காரை கொண்டு வந்து மஹிந்திரா நிறுவனம் அறுவடை செய்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் ஜிம்னி கார் குறைவான விற்பனையை பெறுவதற்கு அதன் லுக் தான் காரணம் என கூறப்படுகிறது. தார் காரின் ரக்கட் லுக் ஜிம்னி காரில் இல்லை என பலர் கருதுகின்றனர். அதே நேரத்தில் ஜம்னியில் 5 வெர்ஷன் கார் ஜப்பானில் சிறப்பாக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 22:30 [IST]
English summary
Mahindra thar vs jimny sales report june 2025
மேலும்... #mahindra #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X