கிராமத்துல இவ்வளவு காசு கொட்டி கிடைக்குதா? டிராக்டரை வித்தே மொத்தத்தையும் அறுவடை பண்ணிடுவாங்க போல!
மஹிந்திரா நிறுவனம் விவசாய பயன்ட்டிற்கான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இந்நிறுவனம் 64,946 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 50 சதவீத அளவிற்கு விற்பனை வளர்ச்சியாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த செப்டம்பர் மாத விற்பவனை விபரங்களை மஹிந்திரா நிறுவனத்தின் விவசாய பயன்பாட்டு வாகன பிரிவு வெளியிட்டுள்ளது. இஅதில் இந்நிறுவனம் 64,946 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக பதிவிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 43,201 டிராக்டர்களை மட்டுமே விற்பனைசெய்திருந்தது. தற்போது 50 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த செப்டம்பர்22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி மாற்றம் வந்த நிலையில் இதற்காகவும் பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்பதாலும் இந்த மாதம் விற்பனை சிறப்பாக அதிகமாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல ஏற்றுமதியிலும் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 66,111 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மொத்தம் 44,256 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்து. தற்போது 49 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 1,165 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் மட்டும் அதாவது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்நிறுவனம் 2,47,336 வாகனங்களை விற்பனைசெய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் மொத்தம் 2,06,236 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகமாகியுள்ளது.
இதில் ஏற்றுமதியிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் 9689 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் வெறும் 8613 வாகனங்கள் தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. தற்போது 12 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது.

விவசாய தொழில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமடைந்து வருகிறது., இதனால் டிராக்டர் தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பால் விலை குறைந்துள்ளது. இதனால் மேலும் இது அதிகமாகும். மார்கெட்டும் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விவசாய பயன்பாட்டு வாகனங்களை தயாரிப்பது குறைவு தான். மஹிந்திரா நிறுவனம் இதில் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications









