டாடாவை ஓரம்கட்ட மஹிந்திரா போட்ட மாஸ்டர் பிளான்! இந்த 2 கார் போதும்!
மஹிந்திரா நிறுவனம் அடுத்த 6 மாதத்தில் தனது புதிய எஸ்யூவி மற்றும் புதிய இவி கார் ஒன்றையும் களம் இறக்க தயாராகி வருகிறது. இது மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த வாகனங்கள் தற்போது இருக்கும் மஹிந்திராவின் விற்பனையை பெறும் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய மாடல் கார்களை சோதனைசெய்து வருகிறது. இதில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் இவிகார்களும் உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனத்தின் ம்பஷன் இன்ஜின் மற்றும் இவி கார்கள் எல்லாம் மிட் சைக்கிள் அப்டேட்டை பெறப்போகிறது. இந்த காரில் 3 டோர் கொண்ட தார் கார், பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய கார்கள் இதற்கு உதாரணம் ஆகும்.

இந்நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விரைவில் உருவாக்குகிறது. இதற்காக அந்நிறுவனம் இந்த காரை பல்வேறு முறை சோதனை செய்துள்ளது. இதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த கார் அடுத்தாண்டு முதல் பாதியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த காரில் உட்பகுதியிலும் வெளி பகுதியிலும் ஏகப்பட்ட அப்டேட்கள் வரப்போகிறது. இன்ஜினை பொருத்தவரை அதே 2.2 லி எம் ஹாக் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லி எம் ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற வாய்ப்புள்ளது.,
இந்த காரின் வடிவமைப்பு மாற்றங்களில் அதன் எக்ஸ்யூவி.இ8 காரின் இன்ஸ்பிரேஷனில் பல அம்சங்கள் இடம் பெற்ற வுள்ளது. இந்த காரை அடிப்படையாக கொண்ட 3 வரிசை சீட்டர் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் காரை களம் இறக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். பெட்ரோல் வெர்ஷனவ் எக்ஸ்யூவி 700 காரில் பம்பர் முதல் முகப்பு பகுதி முழுவதுமாக மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது.

முக்கியமாக இந்த காரில் ஃபிளாஷ் டோர் ஹேண்டில் கள் உள்ளது. பக்கடாட்டு பகுதியில் அலாய் வீல்கள் மாற்றப்பெறவுள்ளன. மொத்த அளவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலர் ஆப்ஷன்களில் சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளன. பின்பகுதியில் உள்ள டெயில் லைட் மற்றும் பம்பர் பகுதியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இந்த காரின் உள்ளே 3 ஸ்கிரீன் கொண்ட லேவுட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் இதில் அடாஸ் 2 தொழிற்நுட்பமும் இடம்பெறும்.
அடுத்ததாக எக்ஸ்இவி 7இ காரும் அடுத்த 6மாதத்திற்குள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த கார் பேட்டரிகள் தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்இவி9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களில் உள்ளதை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக இந்நிறுவனம் பிஇ6 காரை அடிப்படையாக கொண்ட ரேல் இ என்ற ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட காரையும் தயாரித்து வருகிறது. மேலும் தனது 3எக்ஸ்ஓ காரின் இவி வெர்ஷனையும் தயாரித்துவருகிறது.

இது போக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறவனம் தனது விஷன் எஸ் என்ற கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியது.இந்த கார் ஸ்கார்பியோ காரின் சிறிய வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் எல்லாம் வரும் 2027ம் ஆண்டுதான் விற்பனைக்கு வருவதற்கு சாத்தியம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்க கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுவருகிறது.இந்நிறுவனம் இந்தியாவில் முன்னணிநிறுவனமாக மாறி வருகிறது. மாருதிக்கு இணையான போட்டியை வழங்க இந்த கார்கள் நிச்சயம் உதவிசெய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









