இந்த கார் மட்டும் வந்துச்சுனா எல்லாரும் மஹிந்திரா ஷோரூமை தான் தேடிட்டு போக போறாங்க! சன்ரூஃப் எல்லாம் இருக்குமா

மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ காராக அமையவுள்ள 'விஷன் எஸ்' (Vision S) மாடல் 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027க்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் மேல் உள்ள போதிலும், விஷன் எஸ் கான்செப்ட் வாகனத்தில் இருந்து புதிய காரை உருவாக்கும் பணிகளில் ஏற்கனவே மஹிந்திரா தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.

இதன் வெளிப்பாடாக, கிட்டத்தட்ட முழுமையாக வடிவமைக்கப்பட்ட நிலையில், மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட புதிய கார் ஒன்று தற்போது பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் 'எவோ இந்தியா' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளன.

mahindra vision s concept test mule spotted

இந்த சோதனை வாகனத்தின் பெட்டகம் வடிவிலான தோற்றமும், பின் கதவில் பொருத்தப்பட்ட ஸ்பேர் சக்கரமும் தெளிவாகத் தெரிகின்றன. காரின் உட்புறத்தில், இரண்டாவது இருக்கை வரிசையில் கைப்பிடிகள், வண்ணமயமான MID உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் காணப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 15இல் விஷன் எஸ் கான்செப்ட் வாகனத்தை அறிமுகப்படுத்தும்போது, மஹிந்திரா நிறுவனம் வாகனத்தின் உட்புற வடிவமைப்பையும் வெளிப்படுத்தியது. அதன்படி பார்க்கும்போது, புதிய இருக்கை அமைப்பு, சென்டர் கன்சோல் அம்சங்கள் மற்றும் இரட்டை டிஜிட்டல் திரைகள் இந்த புதிய எஸ்யூவி காரில் இடம்பெற உள்ளன.

mahindra vision s concept test mule spotted

விஷன் எஸ், அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவாக, காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் ஆகிய இரு அளவுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் NU_IQ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் இது, பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன், மேனுவல் (MT) மற்றும் ஆட்டோமேட்டிக் (AT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும்.

2027 முதல் 2030ஆம் ஆண்டுக்குள், விஷன் எஸ் உடன், அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி கார்களை விஷன் எக்ஸ் (Vision X) கான்செப்ட்டில் இருந்தும், அடுத்த தலைமுறை தார் வாகனங்களை விஷன் டி (Vision T), பிக்-அப் கான்செப்ட்டில் இருந்தும் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

mahindra vision s concept test mule spotted

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் பிரிவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ வரவேற்பை பெற்றுவரும் நிலையில், மஹிந்திரா தனது புதிய தயாரிப்புகளின் மூலம் இந்த பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இலக்கு வைத்துள்ளது. அதன்படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்திலான எஸ்யூவி கார்கள் சந்தையில் ஸ்கார்பியோவின் பெயரை பயன்படுத்தும் விதமாக 'விஷன் எஸ்' கான்செப்ட்டில் இருந்து புதிய எஸ்யூவி வாகனம் 2027இல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதுதான் தற்போது சோதனை ஓட்டத்தின்போது சாலையில் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி காரின் உட்புற புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. உட்புற கேபினின் படங்களை வைத்து பார்க்கும்போது, இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

mahindra vision s concept test mule spotted

டாஷ்போர்டில் இரட்டை திரை அமைப்பு உள்ளது. ஒவ்வொன்றும் 12.3 அங்குலங்கள் கொண்டதாகத் தெரிகிறது. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகவும் செயல்படும். கண்ட்ரோல்கள் உடன் மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம், விஷன் எஸ் கான்செப்ட் போலவே உள்ளன. இந்த வாகனத்தில் காட்சித்தரும் செங்குத்தான ஏசி வென்ட்கள் விற்பனைக்கு வரும் தயாரிப்பு மாடலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட காராக இருப்பினும், பனோரமிக் சன்ரூஃப் இருப்பது, இந்த புதிய மஹிந்திரா காரின் பிரீமியம் தரத்தை உறுதிப்படுத்துகிறது. இது தற்போதைய எந்த பொலிரோ காரிலும் இல்லாத ஒரு அம்சமாகும். இந்த தயாரிப்பு மாடலின் உட்புறம், விஷன் எஸ் கான்செப்ட் போலவே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காரை பற்றிய மேலும் விவரங்கள் வரும் நாட்களில், கூடுதல் ஸ்பை படங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 17:03 [IST]
English summary
Mahindra vision s concept derived production guise test mule has been spotted
மேலும்... #mahindra #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X