டம்மி காரே இவ்வளவு சூப்பரா இருக்கே! ஒரிஜினல் வந்தா இதை வாங்க லைன்ல நிப்பாங்க!

மஹிந்திரா நிறுவனம் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்நிறுவனம் தனது புதிய நியூ.ஐக்யூ என்ற தளத்தில் தயாரிக்கப்படும். விஷன் எக்ஸ், விஷன் டி, விஷன் எஸ்எக்ஸ்டி, மற்றும் விஷன் எஸ் ஆகிய கார்களின் கான்செப்ட் வெர்ஷன்களை உருவாக்கியுள்ளது. இதில் விஷன் எஸ் கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

மும்பையில் இன்று மஹிந்திரா நிறுவனம் சார்பில் வாகன வெளியீட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தனது புதிய பிளாட்ஃபார்மான நியூ.ஐக்யூ என்ற தளத்தை வெளியிட்டுள்ளது. இதில் தயாரிக்கப்படும் கார்களின் கான்செப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இதில் எக்ஸ் என்ற பெயருடன் வருவது அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எக்ஸ்யூவி ரக காரின் வடிவமைப்பு பால உள்ளது. விஷன் எஸ் கான்செப்ட் கார் ஸ்கார்பியோ காரின் வடிவமைப்பு போல இருக்கிறது.

Mahindra Vision S Concept

இந்த மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் காரை பொருத்தவரை பாக்ஸியான வடிவமைப்பில் பாடியை சுற்றி நீளமான லைன்களுடன் இருக்கிறது. இதன் முன்பக்கம் இரண்டை றெக்கை கொண்ட லோகா வழங்கப்பட்டுள்ளது. இது போக நீள வடிவிலான எல்இடி லைட்டுகள், மற்றம் வித்தியாசமாக எல் வடிவ ஹெட்லைட்டுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் ஆஃப்ரோடு அம்சங்கள் அதிகமாக உள்ளது. முக்கியமாக ரூஃப் பகுதியில்பொருத்தப்பட்ட லைட்டுகள், திடமான பம்பர்கள், பக்காவட்டு பகுதியில் பிளாஸ்டிக் கிளாடிக், பெரிய வீல் ஆர்ச்கள் ஆகிய அம்சங்கள் உள்ளது. இதில் ஃபிளாஷ் டோர் ஹேண்டில் , ஸ்லிம்மான ஓஆர்வியும், புதிய வடிவமைப்பில் அலாய் வீல்கள், உள்ளன. இதை பார்க்கும் போது புதிய தலைமுறை பொலிரோ காரின் வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது.

Mahindra Vision S Concept

இந்த கார் மஹிந்திரா நிறுவனத்தின் நியூ.ஐக்யூ என்ற தளத்தில் உருவாக்கப்படுகிறது. இது 3990 மிமீ நீளம் முதல் 4320 மிமீ வரை நீளம் கொண்டதாக இருக்கலாம். இதன் மூலம் 4 மீட்டருக்கு குறைவான வாகனம், பெரிய வாகனம் என இரண்டு வகையிலும் இதை தயாரிக்க முடியும். இந்த கார்சிறிய அளவில் இருந்தாலும் அதிக இடவசதியுடன் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் முன்பக்க டிரைவ் மற்றும் பின்பக்க டிரைவ் ஆகிய ஆப்ஷன்களும், வலது பக்க டிரைவ் மற்றும் இடதுபக்க டிரைவ் ஆகிய இரண்டு மார்கெட்களுக்கும் ஏற்றவாறு இதன் வடிவமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2665 மிமீ வீல் பேஸ் கொண்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra Vision S Concept

எதிர்காலத்தில் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காராக இந்த காரை களம் இறக்ககூட வாய்ப்புள்ளது. விஷன் எஸ் என்பது தனது கான்செப்ட் காரின் பெயர் தான் இது தயாரிப்பிற்கு வரும் போது பொலிரோ என பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே இந்த ஃபிளாட்ஃபார்மில் தான் புதிய தலைமுறை பொலிரோ கார் தயாரிக்கப்படும் நிலையில் இதன் அடுத்த தலைமுறையாகவோ அல்லது வேற வெர்ஷனாகவோ இந்த விஷன் எஸ் கார் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் மக்கள அதிகம் கவர வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2025, 12:45 [IST]
English summary
Mahindra vision s concept unveiled know full details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X