வீட்டுக்கு வீடு இந்த காரை வாங்க போறாங்க! இப்படி டிசைன் பண்ணா யாருங்க விடுவாங்க?

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனம் புதிய கார்களுக்கான தயாரிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தது. அதன்படி இந்நிறுவனம் விஷன் எஸ், விஷன் டி, விஷன் எஸ்எக்ஸ்டி, விஷன் எக்ஸ் ஆகிய கார்களின் கான்செப்ட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இதில் விஷன் எக்ஸ் கர் குறுித்த விரிவானவ விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

விஷன் எக்ஸ் காரை பொருத்தவரை நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற காரா வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. மார்கெட்டில் உள்ள பிரெஸ்ஸா, கியா சோனட், ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட கார்களுக்கு மாற்றாக இந்த கார் உருவாக்கப்டுகிறது. இதனால் இந்த கார் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில்போட்டியை உருவாக்கும் பட்சத்தில்விற்பனையும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

Mahindra Vision X

இந்த காரை அந்நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள நியூ.ஐக்யூ பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில் இந்த கார் 3990 மிமீ நீளம் முதல் 4320 மீமீ நீளம் கொண்ட கார்களை தயாரிக்க முடியும். இதனால் இந்த பிளாட்ஃபார்மில் 4 மீட்டருக்கு குறைவான இந்த வாகனத்தையும் தயாரிக்க முடியும். இந்த காரின் வடிவமைப்பு எக்ஸ்யூவி காரின் வடிவமைப்பை ஒத்ததாக இருக்கிறது.

இந்த காரில் கம்பஷன் இன்ஜின், ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய வெர்ஷன்களும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு ஸ்போர்ட்டியாகவும், கிராஸ்ஓவர் டிசைனில் உள்ளது. இந்த கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Vision X

இது போக ஸ்கல்ப்டடான பானட் வழங்கப்பட்டுள்ளது. இது போக முன்பக்க வின்ட்ஷீல்டுரேட் வடிவமைப்பிலும் பின்பக்க விண்ட் ஷீல்டு கூபே வடிவமைப்பிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கம் உள்ள ஸ்பாயிலர்கள் பிஇ6 காரில் உள்ளதை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தவிற பின்புறம் மற்ற பாகங்கள் எல்லாம் எக்ஸ்இவி 9இ கார் போலவே இருக்கிறது.

இந்தகாரின் முன்பக்கம் மஹிந்திராவின் டவின் பீக்ஸ் லோகோ உள்ளது. முற்றிலுமாக மூடப்பட்ட கிரின் இதை எக்ஸ்இவி கார் போல தோன்ற வைக்கிறது. மேலும் இந்த பக்கவாட்டு பகுதியும் எக்ஸ்இவி 9இ கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கருப்பு கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. சதுர வடிவ வீல் ஆர்ச்கள், ஏரோ டிசைன்டு டுயல்டோன் அலாய் வீல்கள், லோ ப்ரோஃபைல் டயர்கள் இதில் உள்ளன.

Mahindra Vision X

இந்த கார் சிட்டி பயணத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. விரைவில் இ்நத கார் விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் செக்மெண்டில் ஏகப்பட்ட போட்டிகள் இருப்பதால் இந்த கார் விற்பனைக்கு வரும் போது மிகப்பெரிய புரட்சி மார்கெட்டில் ஏற்படலாம். இந்த கார் வந்த பிறகு வீட்டு வீடு ஒரு கார் வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திராவின் இந்த கார் மிகப்பெரிய புரட்சியை செய்து வரும் நிலயைில், இந்த காரும் மக்களை அதிகம் ஈர்க்கம் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை மார்கெட்டில் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2025, 14:25 [IST]
English summary
Mahindra vision x concept suv revealed know design details
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X