ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் எலக்ட்ரிக் கார் இதுதான்! மஹிந்திரா உச்சத்தில் செல்ல போவது உறுதி!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம், எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் சமீப காலமாக தீவிரமாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், அடுத்ததாக மேலும் ஒரு எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது.

இது, பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும் அளவில் பெரியதாக, அதேநேரம் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை காட்டிலும் அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மஹிந்திரா உருவாக்கும் அந்த புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பான விபரங்கள் 'கார் இந்தியா நியூஸ்' என்கிற் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

mahindra xev 7e electric car

மஹிந்திராவில் இருந்து எக்ஸ்யூவி700 (XUV700) என்கிற கார் விற்பனை செய்யப்படுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் எக்ஸ்யூவி700 ஒன்றாகும். 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 காருக்கு ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை வழங்க மஹிந்திரா தயாராகி வருகிறது.

அந்த எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் கார் தான் தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது என ஆரம்பத்தில் நினைத்தோம். ஆனால், இந்த சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ள காரின் முன்பக்க கிரில் பகுதி முழுவதுமாக மூடப்பட்டு உள்ளது. இதில் இருந்து, இது எலக்ட்ரிக் கார் என்பதை அறிய முடிகிறது.

mahindra xev 7e electric car

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சனாகவே புதிய எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் கார் கொண்டுவரப்பட உள்ளது. இதனால், தற்போது முழுவதும் மறைக்கப்பட்ட சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருக்கும் இந்த கார் எக்ஸ்யூவி700 கார் போன்று உள்ளதாலும், முன்பக்க கிரில் பகுதி மூடப்பட்டு உள்ளதாலும் இது எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக நான்கு புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட்களை (Concepts) காட்சிக்கு நிறுத்த உள்ளது. இதற்காக, 'ஃப்ரீடம்_என்.யு' (Freedom_NU) என்கிற பெயரிலான நிகழ்சிக்கு மஹிந்திரா ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஹிந்திரா காட்சிக்கு நிறுத்த உள்ள நான்கு எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக எக்ஸ்இவி 7இ இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ள சோதனை ஓட்டத்தில் புதிய எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும், காரின் முன்பக்கத்தில் காரின் முழு அகலத்திற்கு வழங்கப்பட்டுள்ள எல்இடி லைட் பாரை காணலாம். மேலும், காரின் முன்பக்கத்தில் தலைக்கீழான L-வடிவத்தில் டி.ஆல்.எல்-கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், சமீப காலமாக மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் காரை காட்டிலும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காருக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை காட்டிலும் குறைந்த விலையிலான எலக்ட்ரிக் காருக்கு இன்னும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் புதிய எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் காரை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது போல் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 9, 2025, 5:00 [IST]
English summary
Mahindra xev 7e electric car spotted in india ahead of freedom nu event unveil
மேலும்... #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+